ஞாயிறு 24, செப்டம்பர் 2017  
img
img

திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன்
புதன் 14 செப்டம்பர் 2016 15:22:00

img

திருமணம் ஆனதும் நடிகைகள் பலர் சினிமாவுக்கு முழுக்கு போட்டு குடும்பத்தோடு ‘செட்டில்’ ஆகி விடுகின்றனர். சிலர் மீண்டும் நடிக்க வருகிறார்கள். நடிகை காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் தகவல்கள் பரவி உள்ளன. திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து சினிமாவில் நடிப்பீர்களா என்று காஜல் அகர்வாலிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- “திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன். காரணம் திருமணம் ஆனதும் நிறைய பொறுப்புகள் வந்து விடும். கணவன் மற்றும் குழந்தைகளை கவனிக்க வேண்டும். கணவர் குடும்பத்தினருக்கு உதவியாக இருந்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும், பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்து நடக்க வேண்டும். ஒரு குடும்பத்தலைவியாக கூடுதல் கடமைகள் வந்து சேரும். தேவைகளும் மாறும். கணவரை கவனிக்க அதிக நேரம் ஒதுக்க வேண்டும். இப்படி நிறைய பொறுப்புகளை வைத்துக்கொண்டு சினிமாவில் நடிப்பது கஷ்டம். எனவே திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்காது என்றே கருதுகிறேன். ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் பயணம் செய்ய முடியாது. திருமணத்துக்கு முன்பு எனக்கு பிடித்த அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து முடித்து விடுவேன். இப்போது நல்ல கதையம்சம் உள்ள படங்கள் எனக்கு அமைகின்றன. பட வாய்ப்புகளும் அதிகம் வருகிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலும் நடிக்கிறேன். பிடித்த கதாபாத்திரங்கள் அனைத்திலும் நடித்து விட்டேன் என்று எப்போது நினைக்கிறேனோ அப்போது திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு தூரமாக சென்று விடுவேன்.” இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
நிபுணன் சினிமா விமர்சனம்

கொலைக்குற்றவாளியை கண்டுபிடிக்கும் விறுவிறுப்பான படம் நிபுணன்.

மேலும்
img
'திருட்டுப் பயலே 2' டீஸரை வெளியிடும் அமலா பால்!

கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிப்பில் பாபி சிம்ஹா

மேலும்
img
நடனத்தில் சிம்பு செய்த சாதனை!

இரண்டு பாகமாக வெளிவரயிருக்கும் முதல் சிம்பு படம்

மேலும்
img
ஹீரோயின்களுக்கு மரியாதையான ரோல் கொடுங்கள்

- ஜோதிகா சாட்டையடி!

மேலும்
img
எனக்கு அது வேண்டும்... தருகிறீர்களா?

வௌிப்டையாக என கேட்ட பாரதிராஜா பட ஹீரோயின்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img