திங்கள் 23, அக்டோபர் 2017  
img
img

2018 பட்ஜெட்டில் தொழிலாளர் நலன் காக்கப்படுமா?
வியாழன் 28 செப்டம்பர் 2017 16:30:30

img

தொழிலாளர் சேமநிதி வாரியத்திற்கு (இ.பி.எப்.) சொந்தமான பணத்தில் 1,600 கோடி வெள்ளியை அமெரிக்காவில் முதலீடு செய்வதற்கு பதிலாக குறைந்த வருமானத்தை பெறக்கூடிய இ.பி.எப். சந்தாதாரர்களை உள்ளடக்கிய தொழிலாளர்களுக்கு வாங்கத்தக்ககூடிய சுமார் 2 லட்சம் வீடுகளை கட்டிக்கொடுக்கும் திட்டத்தை அமல்படுத்துமாறு அரசாங்கத்திற்கு, மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (எம்.டி.யூ.சி.) முழு வீச்சில் நெருக்குதல் கொடுக்க விருக்கிறது.

நாட்டில் உள்ள 65 லட்சம் இ.பி.எப். சந்தாதாரர்களின் நலனை காப்பதற்கு இத்தகைய ஒரு கடுமையான அழுத்தத்தை கொடுப்பதற்கு மலேசிய தொழிற்சங்க காங்கிரஸான எம்.டி.யூ.சி. தயாராகி வருவதாக அதன் பொதுச் செயலாளர் ஜே. சோலமன் தெரிவித்தார்.

அண்மையில் அமெரிக்கா சென்ற பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், அமெரிக்காவில் கட்டமைப்பு பணிகளுக்கு மலேசியாவின் இ.பி.எப். வாரியம்  4 பில்லியன் டாலரை கிட்டத்தட்ட 1,600 கோடி வெள்ளியை முதலீடு செய்யும் என்று அறிவித்து இருப்பது எம்.டி.யூ.சி.யை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாக சோலமன் குறிப்பிட்டார்.

மலேசியாவில் மொத்தம் ஒரு கோடியே 40 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் பி.40 என்று சொல்லக்கூடிய குறைந்த வருமானம் உடையவர்கள் அதாவது 3,900 வெள்ளிக்கும் குறைவாக சம்பளம் வாங்குகின்றவர்கள் பலர் உள்ளனர். எம்.40 என்று சொல்லக்கூடிய 8,390 வெள்ளிக்கும் குறைவான சம்பளம் பெறுகின்றவர்களும் அதிகமாக உள்ளனர். 

Read More: Malaysia Nanban News Paper on 28.9.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
முஸ்லிம் அல்லாதவர்களிடம் முஸ்லிம்கள் முடிவெட்டிக் கொள்ளக் கூடாதா?

டாக்டர் தான் சுவான் ஹோங்

மேலும்
img
ஷாபி  கைது:  வாரிசான் கட்சியை  முடக்கும் நோக்கமா? 

முன்னாள் புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டுத்துறை

மேலும்
img
மலேசியாவிற்கு  ஜி.எஸ்.டி.  வரி தேவயில்லை.

அதனை தாராளமாக அகற்றலாம்

மேலும்
img
2018-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தங்கள் பள்ளிகளுக்குத் தேவையான ஒதுக்கீடு வழங்கப்படுமா?

பள்ளிகளுக்கான ஒதுக்கீடு குறைக்கப் பட்டதைத் தொடர்ந்து

மேலும்
img
ஈப்போ லிட்டில் இந்தியா சேலை அழகு ராணியாக ஹேமதர்ஷினி தேர்வு

வெற்றி பெற்றவர்களுக்கு ஈப்போ லிட்டில் இந்தியா

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img