திங்கள் 23, அக்டோபர் 2017  
img
img

வெ. 4 கோடி மோசடி. அமைச்சரின் அரசியல் செயலாளர் கைது
வியாழன் 28 செப்டம்பர் 2017 13:50:32

img

அரசாங்க நிதியை மோசடி செய்தது தொடர்பில் மலேசிய ஊழல்  தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) விசாரணைக்காக மனிதவள அமைச்சரின் அரசியல் செயலாளர்  ஒருவரை எம்ஏசிசி கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நபர் (வயது 61) டத்தோ அந்தஸ்திலானவர் ஆவார். எம்ஏசிசியில் வாக்கு மூலம் அளிக்கும் வகையில் புத்ரா ஜெயாவிலுள்ள அலுவல கத்திற்கு சென்றபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் சரவா ஐக்கிய மக்கள் கட்சியின் (எஸ்யூபிபி) செரியன் கிளை உறுப்பி னராவார்.

திறன் மேம்பாட்டு நிதிக் கழகத்திற்கு (பிடிபிகே) அனுப்பப்பட்ட ஒதுக்கீட்டை மோசடி செய்ததாக எம்ஏசிசி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இவ்விசாரணை  தொடர்பில்  ஏற்கெனவே பிடிபிகே அதிகாரிகள் மூவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 2016,  2017 இல் கூட்டரசு அரசாங்கம் ஒதுக்கீடு செய்த வெ.4 கோடி நிதியை சம்பந்தப்பட்ட இயக்குநர் மோசடி செய்ய உதவியதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

Read More: MALAYSIA NANBAN NEWS PAPER on 28.9.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
முஸ்லிம் அல்லாதவர்களிடம் முஸ்லிம்கள் முடிவெட்டிக் கொள்ளக் கூடாதா?

டாக்டர் தான் சுவான் ஹோங்

மேலும்
img
ஷாபி  கைது:  வாரிசான் கட்சியை  முடக்கும் நோக்கமா? 

முன்னாள் புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டுத்துறை

மேலும்
img
மலேசியாவிற்கு  ஜி.எஸ்.டி.  வரி தேவயில்லை.

அதனை தாராளமாக அகற்றலாம்

மேலும்
img
2018-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தங்கள் பள்ளிகளுக்குத் தேவையான ஒதுக்கீடு வழங்கப்படுமா?

பள்ளிகளுக்கான ஒதுக்கீடு குறைக்கப் பட்டதைத் தொடர்ந்து

மேலும்
img
ஈப்போ லிட்டில் இந்தியா சேலை அழகு ராணியாக ஹேமதர்ஷினி தேர்வு

வெற்றி பெற்றவர்களுக்கு ஈப்போ லிட்டில் இந்தியா

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img