செவ்வாய் 21, ஆகஸ்ட் 2018  
img
img

காவிரி நீர் பிரச்சினையில் வன்முறையை கைவிடவேண்டும்
புதன் 14 செப்டம்பர் 2016 15:16:03

img

காவிரி நீர் பிரச்சினையால் கர்நாடகாவில் வன்முறை வெடித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கருத்து வெளியிட்டு வரும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதியும் தனது கருத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது, காவிரி நதிநீர் பிரச்சினை. அதைப்பற்றி பேச நான் இங்கு வரவில்லை. ஆனால், இந்த விஷயத்தில் சாதாரண பொதுமக்களை தாக்குவது வருத்தமாக இருக்கிறது. நமது பிரச்சினையை எடுத்து கையாள்வதற்காகத்தான் நாம் ஓட்டுப் போட்டு அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுத்திருக்கிறோம். நம்முடைய கோரிக்கைகளை அவர்களிடம் வைப்போம். அவர்கள் இதற்காக பேசி ஒரு தீர்வு கொண்டு வரட்டும். அதை தவிர்த்துவிட்டு ஒருநாள் வேலைக்கு போகவிட்டால்கூட குடும்பம் நடத்தவே கஷ்டப்படுகிற இயல்பு வாழ்க்கை வாழ்ந்து வரும் சாதாரண பொதுமக்களை தாக்குவது வருத்தமாக இருக்கிறது. அப்படி தாக்கப்பட்ட ஒவ்வொருத்தருக்கு பின்னாலும் அவர்களை நேசிக்கிற அவர்கள் வரவை காத்திருக்கும் ஒரு பெரிய குடும்பம் இருக்கிறது. இந்த பிரச்சினை மட்டும் இல்லையென்றால் நமக்குள் ஒரு மிகப்பெரிய அன்பு பரிமாற்றமே நடந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். நமக்குள் இருக்கின்ற இந்த பகைமை உணர்ச்சி என்பது காலங்காலமாகவே திணிக்கப்பட்டு விட்டது. அதை நாம் உணரவேண்டும். எனக்கு என் மொழி என்பது என் தாய் மாதிரி. நான் என்னுடைய அம்மாவை நேசிக்கிறேன். அதேபோல்தான் உங்கள் மொழியையும் நாங்கள் மதிக்கிறோம், நேசிக்கிறோம். இந்த பிரச்சினையை எடுத்து அரசாங்கம் கையாளட்டும். நம்முடைய கோரிக்கைகளை எல்லாம் அரசாங்கத்திடம் வைப்போம். வன்முறையை கைவிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து சாதாரண மக்களை தாக்காதீர்கள். ரொம்பவும் வருத்தமாகவும், கஷ்டமாகவும் இருக்கிறது. இவ்வாறு அதில் பேசியுள்ளார்.

பின்செல்

img
எம். ஜி. ஆர். அவர்களின் வாழ்க்கை வரலாறு ‘எம்ஜிஆர்.’

இத்திரைப்படத்தில் எம்ஜிஆர் ஆக சதீஷ்குமார், பேரறிஞர் அண்ணாவாக இயக்குனர்

மேலும்
img
பாடாய் படுத்தியெடுத்த சென்சார் யூஏ சான்றிதழுடன் திரும்பியது ‘

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’!

மேலும்
img
“வில்லனாக நடிக்கவே விருப்பம்” ; களத்தூர் கிராமம் மிதுன்குமார் 

அவரது சொந்தக்கதை சோகக்கதை ஒன்றும் ஒளிந்துள்ளது..

மேலும்
img
'குரு உட்சத்துல இருக்காரு'. இசைவெளியீட்டு விழா

திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன்

மேலும்
img
விழித்திரு விமர்சனம்

வெளிநாட்டுக்கு செல்வதற்காக சென்னை வந்த கிருஷ்ணா

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img