சனி 16, டிசம்பர் 2017  
img
img

2 தங்கம், 1 வெள்ளி என 3 பதக்கங்களை வென்று ஹேமலா தேவி சாதனை
வெள்ளி 22 செப்டம்பர் 2017 13:00:27

img

பாரா ஆசியான் விளையாட்டுப் போட்டியில் 2 தங்கம், 1 வெள்ளி என 3 பதக்கங்களை வென்று ஹேமலா தேவி சாதனைபடைத்துள்ளார்.தென்கிழக்காசிய நாடுகளுக்கான 9ஆவது பாரா ஆசியான் விளையாட்டுப் போட்டி நாட்டில் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.11 நாடுகளில் 1,450 போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டு வெற்றிகளை குவித்து வருகின்றனர்.

உபசரணை நாடான மலேசியா 103 தங்கப்பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற இலக்குடன் தொடர்ச்சியாக போராடி வருகிறது.இதன் தடகள போட்டி யில் ஈட்டி எறிதல் பிரிவில் மலேசியாவை பிரதிநிதித்து ஹேமலா தேவி எனி குட்டி கலந்து கொண்டார். ஹேமலா தேவி ஈட்டியை 20.37 மீட்டர் வீசி வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இப்பிரிவில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை தங்கப்பதக்கமும், வியட்நாம் வீராங்கனை வெண்கலப்பதக்கமும் வென்றனர். பாரா ஆசியான் விளையாட்டுப் போட்டியில் 2 தங்கம், 1 வெள்ளிப்பதக்கம் வென்றது  நினைத்து நான் பெருமைப்படுகிறேன். எனக்கு கடுமையான காய்ச்சலாக இருந்தாலும் வெற்றி பெறு வதற்காகவும் நாட்டிற்கு பெருமை தேடித் தருவதற்காகவும் எனக்கு நானே ஊக்கமளித்துக் கொண்டேன் என ஹேமலா தேவி தெரிவித்தார்.

READ MORE: MALAYSIA NANBAN NEWS PAPER ON 22.9.2017

 

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
சாதனை புரிந்து நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்

கைரூல் ஹபிசின் சாதனைகளை முறியடிக்கும் இலக்குடன்

மேலும்
img
கராத்தே விளையாட்டுப் போட்டி, ஆர். கங்கா தரன், எஸ். சிவபூரணி ஆகியோர் தங்கப்பதக்கம்

ஷீகோகாய் கராத்தே சங்கத்தின் ஏற்பாட்டிலான

மேலும்
img
சோங் வெய் அபார வெற்றி

14, 21-19 என்ற புள்ளிகளில் சோங் வெய்

மேலும்
img
உலக சாதனையை நோக்கி மாய வித்தகன் விக்கி

12 பூட்டுகள் போடப்பட்ட நிலையில் சவப்பெட்டிக்குள்

மேலும்
img
உலகக் கிண்ண போட்டிக்கு தகுதி பெறுவதே எங்களின் இலக்கு

இப்போட்டியில் மலேசியாவின் இளம் வீராங்கனைகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img