img
img

கெட்கோ நில விவகாரத்தில் மற்றொரு அதிரடி திருப்பம் 
செவ்வாய் 19 செப்டம்பர் 2017 12:35:55

img

பகாவ், கெட்கோ நில விவகாரத்தில் மற்றொரு அதிரடி திருப்பமாக,   69 வயது இந்திய ஆடவர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கைது  செய்துள்ளது. நில ஏல விற்பனையில் சம்பந்தப்பட்டவர் என சந்தேகிக்கப்படும் அந்த ஆடவர் நேற்று மதியம் வாக்குமூலம் பதிவுக்காக எம்.ஏ.சி.சி. அலுவலகம் வந்திருந்தபோது கைது செய்யப்பட்டார் என்பதை எம்.ஏ.சி.சி. உறுதிப்படுத்தியுள்ளது.  

புத்ரா ஜெயாவில் உள்ள எம்.ஏ.சி.சி. தலைமையகத்தில் அந்த ஆடவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பிறகு தாங்கள் இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஸுல்கிப்ளி அஹ்மட்  இங்கு தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் முக்கியமான சாட்சியாக விளங்கும் அந்த ஆடவரை நாங்கள் கைது செய்திருக்கிறோம் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். நேற்று மதியம் 2.45 மணிக்கு வாக்குமூலம் பதிவு செய்யப்ப டுவதற்காக அந்த ஆடவர் தலைமையகம் வந்திருந்தார் என்று அவர் சொன்னார்.

Read More: MALAYSIA NANBAN NEWSPAPER ON 19.9.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
வாக்குறுதிகளை நிறைவேற்ற கூடுதல் காலம் தேவை.

அந்த வாக்குறுதிகள் நிறை வேற்றப் படுவதற்கு 100 நாட்கள்

மேலும்
img
நாடற்றவர்கள் பிரச்சினையைத் தீர்க்க ‘செடிக்’ உதவும்

நாடற்றவர்களுக்கு குடியுரிமை கிடைப்பதற்கான

மேலும்
img
இந்துக்களின் நலன் காக்க புதிய சட்டம்.

அந்த சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல்

மேலும்
img
ஒற்றுமையையும் தேசப்பற்றையும் இளையோர் மனதில் விதையுங்கள்.

பல போராட்டங்கள், முயற்சிகளுக்கு

மேலும்
img
கட்டுப்பாடு இல்லாவிடில் ஆட்சி கவிழலாம். துன் மகாதீர் எச்சரிக்கை

வாரிசான் சபா கட்சி எம்.பி.களுக்கும் பிரதமர் துன் டாக்டர்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img