வெள்ளி 15, டிசம்பர் 2017  
img
img

இந்தியப் பிரஜைகள் அலைக்கப்படலாமா?
சனி 16 செப்டம்பர் 2017 14:19:16

img

மலேசியாவில் தங்கி வேலை செய்யும் இந்திய பிரஜைகள், பல்வேறு விவகாரங்களில் சொந்த தூதரகத்தினா லேயே அலட்சியம் செய்யப்படுவதாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளன. 

இங்குள்ள இந்திய பிரஜைகளில் கிட்டத்தட்ட 60 அல்லது 70 விழுக்காட்டினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஆனால், தாங்கள் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு பிரச்சினை  தொடர்பாக இந்தியத் தூதரகத்தின் உதவியை நாடும் போது, இந்தி பேசும் அதிகாரிகள், மிகுந்த 

அலட்சியத்துடன் நடந்து கொள்வதாகவும் தாங்கள் அறவே மதிக்கப்படுவதில்லை என்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மலேசியாவில் 60 முதல் 70 விழுக்காட்டினர் தமிழ்நாட்டுக்காரர்களாக இருந்த போதிலும் இந்திய தூதரகத்தில் முக்கிய அலுவல்களுக்கு நியமிக்கப்பட்டவர்கள் இந்தியாவில் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்தி மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறார்கள். ஏதாவது ஒரு விவகாரத்தை கையாள வேண்டு மானால் ஆங்கிலம் தெரிந்த ஒருவரை துணைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருப்பதாக இங்கு பூச்சோங்கில் வேலை செய்யும் மதுரையை சேர்ந்த விஸ்வநாதன் தெரிவித்தார்.

Read More: MALAYSIA NANBAN NEWSPAPER 16.9.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பி.டி.பி.டி.என்.  சேமிப்புத் திட்டத்திற்கு ஏர் ஆசியா உதவி

ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் வசதி குறைந்த

மேலும்
img
இரு வெவ்வேறு தீ சம்பவங்களில் 9 பேர் பலி

நான்கு முதியோர் உட்பட ஐவர் கருகி மாண்டனர்.

மேலும்
img
MCY வர்த்தக விருது. மலேசிய பெண் ஸ்ரீ லதா வாகை சூடினார்

Angel on the Plane

மேலும்
img
பினாங்கு போலீஸ் தலைவராக டத்தோ தெய்வீகன் 33 ஆண்டுகளுக்குப் பிறகு ஓர் இந்தியர் நியமனம்

ஈப்போவில் பிறந்து வளர்ந்தவரான தெய்வீகன், மலாயா பல்கலைக்கழகத்தில்

மேலும்
img
அடிக்கல் நாட்டு விழா செய்து 6 ஆண்டுகள் கடந்து விட்டன.

செரண்டாவில் தமிழ்ப்பள்ளி வருமா? வராதா?

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img