வியாழன் 22, பிப்ரவரி 2018  
img
img

ஃபெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!
வியாழன் 03 ஆகஸ்ட் 2017 15:30:23

img

ஃபெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது' என்று ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். ஃபெப்சி அமைப்பினருடன் வேலை செய்ய மாட்டோம்' என்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவை திரும்பப் பெற வேண்டும், ஒப்புக்கொண்ட சம்பளத் தைக் குறைக்கக் கூடாது, பொது விதிகளை மதிக்க வேண்டும்' என்ற கோரிக்கைகளை வைத்து ஃபெப்சி தொழிலாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 1- ம் தேதியில் இருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, நடிகர் ரஜினிகாந்தை ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட ஃபெப்சி நிர்வாகிகள் சந்தித்து பேசினார். இதையடுத்து, ரஜினி, இருதரப்புக்கும் வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.கே.செல்வமணி, ''ஃபெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்படுகிறது. நாளை முதல் படப்பிடிப்பில் ஃபெப்சி தொழிலாளர்கள் வேலை செய்வர். சம்பள பிரச்னை தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது'' என்று கூறினார். 'ரஜினி, தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று ஏகமனதாக வேலை நிறுத்தத்தை கைவிடுகிறோம்' என்று ஃபெப்சி தொழி லாளர்கள் கூறியுள்ளனர். ஃபெப்சி தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் கிட்டத்தட்ட 40 தமிழ் திரைப்படங்களின் படப்படிப்பு நடத்து முடியாமல் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
எங்களுக்கு `மோடி கேர்’ தேவையேயில்லை! - மம்தா பானர்ஜி அதிரடி

தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்துக்கு ஆண்டொன்றுக்கு

மேலும்
img
கண்திருஷ்டி கழிக்க சன்னி லியோன் ஃப்ளெக்ஸ்! விவசாயியின் கில்லாடி டெக்னிக்

இப்போது, அந்தப் பகுதி வழியாகச் செல்பவர்களின்

மேலும்
img
மாணவர்களைப் போராட்டங்களில் ஈடுபடுத்தினால் நடவடிக்கை!'

எச்சரிக்கும் கலெக்டர்

மேலும்
img
நளினியை விடுவிக்க முடியாது! - தமிழக அரசின் திடீர் விளக்கம்

தமிழக அரசின் அரசாணையைத் தொடர்ந்து தமிழக உள்துறை

மேலும்
img
எடப்பாடி அரசைக் காப்பாற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்!

- ஸ்லீப்பர் செல்களால் உறைந்த மேலிடம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img