செவ்வாய் 19, ஜூன் 2018  
img
img

பிரபல எண் கணித நிபுணர் டாக்டர் முதையா மீது 13 மோசடி குற்றச்சாட்டுகள்
வியாழன் 03 ஆகஸ்ட் 2017 12:08:40

img

கோலாலம்பூர், ஆஸ்ட்ரோ, மின்னல் எப்எம் ஆகியவற்றில் எண் கணித மேதை என வர்ணிக்கப்பட்டு மலேசிய மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட முதையா மீது 13 மோசடி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் 18ஆம் தேதி தங்காக் காவல் துறையினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று காலை இவரின் வழக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் சட்டம் 420 பிரிவின் கீழ் குற்றச்சாட் டுகள் கொண்டு வரப்பட்டன. தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை டாக்டர் முதையா (வயது 58) நீதிமன்றத்தில் மறுத்துள்ளார். இவருக்கு வெ.15 ஆயிரம் ஜாமின் தொகையை நீதிபதி விதித்துள்ளார். இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எண் கணித ஆற்றலின் மூலமாக எதிர் காலத்தை மாற்றி அமைக்க முடியும் என்று விளம்பரம் செய்த இவர் தங்காக் நகரிலுள்ள ஒருவரிடம் வெ.52 ஆயிரம் ஏமாற்றி மோசடி செய்ததாக ஏற் கெனவே இவர் மீது வழக்கு தொடரப்பட்டு தங்காக் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். தஜூடின் ஜமால் முகமது என்ற தன் பெயரை இவர் முதையா என்று மாற்றி வைத்துள்ளார். எண் கணிதம் வழி பெயரை மாற்றி அமைத்துக் கொண்ட இவருக்கே அது பயனளிக்காமல் போனது. வானொலியில் இவர் பங்குபெறும் நிகழ்ச்சியை படைத்த பெண் அறிவிப்பாளர் மூச்சுக்கு முன்னூறு தடவை இந்நபரை ‘என்னங்க டாக்டர், எப்படிங்க டாக் டர், ஏங்க டாக்டர்’ என அழைத்து முதையாவை அறிமுகம் செய்து வைத்தார். இவர் எஸ்.ஆர்.பி வரையில்தான் கல்வி கற்றுள்ளார். ஆனால் எப்படி இவருக்கு டாக்டர் என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. இவருக்கு டாக்டர் பட்டத்தை இலங்கையிலுள்ள பல்கலைக்கழகம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் உண்மை நிலையை அறிய நீதிமன்றம் இலங்கையிலுள்ள பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது. பெற்றோர் வைத்த பெயரை சற்று மாற்றிக் கொண்டு சும்மா இருந்தாலே யாவும் கைக்கூடும் என்று சமுதாயத்திற்கு வழியை காட்டியவரும் இவர்தான். இவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இவரால் ஏமாற்றப்பட்ட மேலும் பலர் நாடு தழுவிய ரீதியில் இன்னமும் போலீஸ் புகார்களை செய்து வரு வதாக கூறப்படுகிறது. வியாபாரங்களை ஆரம்பிக்க எண்ணுபவர்களின் முதலீட்டு பணத்தை பூஜையில் வைத்து வழிபட்டு பின்னர் அதனை கொண்டு வியாபாரத்தை தொடங் கினால் சிறப்பாக இருக்கும் என கூறி இவர் வாங்கும் பணம் திருப்பி தரப்படாமல் வியாபாரக் கனவை இழந்து தவிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகம் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
இவ்வார  இறுதியில் முழு அமைச்சரவை பட்டியல்.

புதிய அமைச்சரவைப் பற்றிய அறிவிப்புக்கு சில காலம்

மேலும்
img
இந்திரா காந்தியின் மகளை கண்டுபிடிக்க விரைவில் ஐ.ஜி.பி யுடன் சந்திப்பு

விரைவில் போலீஸ் படைத் தலைவர் முகமட்

மேலும்
img
தலைநகர் ரமலான் சந்தை முறைகேடு . ஹராப்பானுக்கு முதல் கரும்புள்ளி

நோன்புப்பெருநாளையொட்டிய ரமலான் சந்தை விவகாரத்தில்

மேலும்
img
கண் பார்வை பாதித்த தாயார், படுத்த படுக்கையாய் தந்தை.

குடியிருக்க வீடும் இல்லாமல் நிம்மதியும் இல்லாமல் குழந்தைகள்.

மேலும்
img
நஜீப் வீடுகளில் மீட்கப்பட்ட பொருட்களின் மதிப்பு வெ. 50 கோடியா?

இதுவரை கணக்கிட்டதில், அவற்றின் மதிப்பு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img