செவ்வாய் 26, செப்டம்பர் 2017  
img
img

நிபுணன் சினிமா விமர்சனம்
ஞாயிறு 30 ஜூலை 2017 11:01:07

img

அதிகாரம் மிக்க அரசியல்வாதி ஒருவரை, ஒருவன் கொலை செய்கிறான். அதுவும் சித்தரவதை செய்து கொன்றுவிட்டு தூக்கில் தொக்கவிட்டு இறந்தபின்பு துப்பாக்கியால் சுடுகிறான். கொலைகாரனை கண்டுபிடிக்க போலீஸ்துறை, அர்ஜூனை நியமிக்கிறது. அவருக்குத் துணையாக உதவி போலீஸ் அதிகாரிகளாக பிரசன்னாவையும் வரலட்சுமியையும் நியமிக்கிறார்கள். முதல் கொலை நடந்த இடத்தை பார்வையிட சென்ற அர்ஜூன் சில தடயங்களை எடுத்துக் கொண்டு சோதனை செய்கிறார். அதில் கொலைகாரன் ஒரு சைக்கோவாக இருக்கக்கூடும் என்று தீர்மானிக்கிறார். அடுத்தாகவும் சித்திரவதை செய்து ஒரு பெண் டாக்டர் கொலை செய்யப்படுகிறார். அங்கும் கிடைக்கும் தடயங்கள் கொலைகாரன் ஒரு சைக்கோதான் என்பதை உறுதி செய்கிறார். மூன்றாவதாக ஒரு வழக்கறிஞரை கொடூர சித்திரவதைக்குப் பிறகு கொலை செய்து, தூக்கில் தொங்கவிட்டப்பிறகு துப்பாக்கியால் சுடுகிறான். முதல் கொலையில் அரசியல்வாதியின் மார்பில் நான்கு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருக்கும். இரண்டாவதாக கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் மார்பில் மூன்று குண்டுகள் துளைத்திருக்கும். மூன்றாதாக கொலை செய்யப்பட்ட வழக்கறிஞரின் மார்பில் இரண்டு குண்டுகள் துளைத்திருக்கும். இதை ஆராய்ந்த அர்ஜூன், இன்னும் கடைசியாக ஒரு குண்டு துளைக்க ஒருவன் கொலை செய்யப்படபோகிறான், அவனை கண்டு பிடித்து பின்தொடர்ந்தால் கொலைகாரனை பிடித்துவிடலாம் என்று அர்ஜூன் யோசிக்கிறார். அந்த ஒருகுண்டு துளைக்கும் மார்பு தன்னுடைய மார்புதான் என்று அர்ஜூனனுக்கு தெரியவருகிறது. தன்னை கொலை செய்யப்போகும் அந்த சைக்கோவை எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதுதான் உச்சக்கட்ட காட்சியாகும். உச்சக் கட்ட காட்சியில், சமூகத்தில் உயர்ந்தவர்களாக இருந்து கொண்டு சட்ட விரோத செயல்களை செய்யும் பெரியமனிதர்களை கொலை செய்யும் திட்டம் ஒன்று அர்ஜூனனுக்கு உதயமாகிறது. அது எது என் பதை வெள்ளித்திரையில் காணலாம். நிபுணன் திரைப்படம் அர்ஜூனனுக்கு 150 வது படம். இளைஞராக இருந்த போது உள்ள சுறுசுறுப்பு இப்போதும் அப்படியே இருக்கிறது. ஒருசில நரை முடியைத்தவிர உடற்கட்டுக் குலையாமல் அப்படியே வைத்திருப்பது அவரின் விடா உடற்பயிற்சியை காட்டுகிறது. போலீஸ் அதிகாரியாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அசலத்தலான நடிப்பு. குடும்ப உணர்வை வெளிப் படுத்தும் காட்சியில் அர்ஜூன் மின்னுகிறார். அர்ஜூன் திரைவானில் தோன்றும் மங்காத விடிவெள்ளி நட்சத்திரம். அடுத்து அர்ஜூனனுக்கு உதவியாக வரும் பிரசன்னாவும் தனக்கு கொடுத்த பாத்திரத்தை இயல்பாகவே செய்திருக்கிறார். கதா நாயகனாக வலம்வந்த பிரசன்னாவுக்கு அழுத்தமான பாத்திரம் அமையவில்லை. கச்சேரியில் தனி ஆவர்த்தனம் வாசித்தவர் பின் னுக்கு உட்கார்ந்திருப்பது போல் இருந்தது. நாதஸ்வரம் வாசித்தவர் கையில் ஒத்து ஊதும் குழல். வரலட்சுமி வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. பிரசன்னாவை கலாய்ப்பதே வரலட்சுமியின் வேலை. பிரசன்னாவையும் வரலட்சுமியையும் பார்க்கும்போது, புடலங்காய் பக்கத்தில் சொரைக்காயை வைத்து வியாபாரம் செய்திருக்கிறார் இயக்குநர். வரலட் சுமியின் அசால்டான நடிப்பு அனைவரையும் கவர்கிறது. உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் அவருக்குத் தேவை. துப்பறியும் படம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு காட்சிகளை அலுப்புத்தட்டாமல் ஓட்டிச் செல்கிறார் இயக்குநர் அருண் வைத்தியநாதன். விறுவிறுப்பான சுறுசுறுப்பான இயக்கம். நிபுணன், ஒரு நல்ல நாவல் படத்தைப்பார்த்தோம் என்ற நிம்மதி ரசிகர்களுக்கு.

பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
நிபுணன் சினிமா விமர்சனம்

கொலைக்குற்றவாளியை கண்டுபிடிக்கும் விறுவிறுப்பான படம் நிபுணன்.

மேலும்
img
'திருட்டுப் பயலே 2' டீஸரை வெளியிடும் அமலா பால்!

கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிப்பில் பாபி சிம்ஹா

மேலும்
img
நடனத்தில் சிம்பு செய்த சாதனை!

இரண்டு பாகமாக வெளிவரயிருக்கும் முதல் சிம்பு படம்

மேலும்
img
ஹீரோயின்களுக்கு மரியாதையான ரோல் கொடுங்கள்

- ஜோதிகா சாட்டையடி!

மேலும்
img
எனக்கு அது வேண்டும்... தருகிறீர்களா?

வௌிப்டையாக என கேட்ட பாரதிராஜா பட ஹீரோயின்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img