திங்கள் 23, ஏப்ரல் 2018  
img
img

டி.ஐ.ஜி ரூபா மாற்றம் எதிரொலி: பெங்களூரு சிறைக் கைதிகள் போராட்டம்!
திங்கள் 17 ஜூலை 2017 16:58:52

img
கர்நாடக மாநிலம், பெங்களூரு சிறைத்துறையில் பெண் டி.ஐ.ஜி-யாகப் பதவி வகித்தவர் ரூபா. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண் டனை பெற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார் சசிகலா. அவருக்கு சிறைக்குள் பல நவீன வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றது என்றும் இதற் காக டி.ஜி.பி சத்யநாராயணராவ் 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும் உயரதிகாரிகளுக்கு ஆவணங்களை அனுப்பி வைத்தார் ரூபா. இந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் அடுத்ததாக, இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார். இந்த விசா ரணை நடந்துகொண்டிருக்கும் நிலையில், பார்வையாளர்களைப் பார்க்க சசிகலாவுக்கு தனி அறை வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி மேலும் அதிர்வலையை ஏற்படுத்தினார் ரூபா. இதையடுத்து, இன்று காலை அவர் திடீரென்று பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். பெங்களூரு நகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, ஏடிஜிபி சத்யநாராயணா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ரூபா பணி யிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, ரூபாவை மீண்டும் சிறைத் துறை டி.ஐ.ஜி-யாக நியமிக்க வேண்டும் என்று கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய விவகாரம் : எஸ்.வி சேகர் மீது கரூர் நீதிமன்றத்தில் வழக்கு

பெண் பத்திரிகையாளர் ஒருவரை பத்திரிகையாளர்

மேலும்
img
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு என்றால் வளர்ந்த பெண்களை சீரழிப்பது...?

ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவரை

மேலும்
img
காவிரி விவகாரம்: ஏப்ரல் 29ம் தேதி தடையை மீறி மெரினாவில் போராட்டம்

வேல்முருகன் அறிவிப்பு

மேலும்
img
வைரலாகும் எடப்பாடி தியேட்டர் விளம்பரம்

ஐயா பெயருக்கு தான்"

மேலும்
img
குஷ்புக்கு எதுக்கு கோயில்?... ஆந்திர முதல்வரின் சேவைக்காக கோயில் கட்டும் திருநங்கைகள்

வாழ்க்கை மேம்பட திருநங்கைகளுக்கான ஓய்வூதிய திட்டம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img