வியாழன் 19, அக்டோபர் 2017  
img
img

நாளை இந்தியக் குடியரசுத்தலைவருக்கான தேர்தல்!
ஞாயிறு 16 ஜூலை 2017 13:21:48

img

ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் தேர்தல் நாளை ஜூலை 17-ம் தேதி நடைபெறவுள்ளது. நாட்டின் அடுத்தக் குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் ஆளும் பா.ஜ,க சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி சார்பில் மீராகுமார் போட்டியிடுகிறார். தமிழகத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக டெல்லியில் இருந்து வந்திருந்த தேர்தல் மேற்பார்வையாளர்கள் நேற்று மாலை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். இந்த 15-வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத்தில், சென்னை-600 009, புனித ஜார்ஜ் கோட்டை, சட்டமன்றப் பேரவைச் செய லக வளாகத்தில் அமைந்துள்ள 'குழுக் கூட்ட அறை' -யில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்தத் தேர்தலை நடத்த, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் சட்டமன்றப் பேரவைச் செயலாளர் (பொ) க. பூபதி, சட்டமன்றப் பேரவைச் செயலக இணைச் செயலாளர் பா.சுப்பிரமணியம் ஆகியோர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
40 பேர் இறந்தது பெரிதல்ல': மத்திய குழு மருத்துவரின் டெங்கு பலி கருத்துக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்

மக்கள் துயரப்படும் போது அரசால் ஒன்றும் செய்யமுடியாது

மேலும்
img
தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராகவே ஸ்டாலின் ஆகலாம்: தமிழிசை அழைப்பு

யாராக இருந்தாலும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டால்

மேலும்
img
தமிழக அரசியலில் கலைத்துறையினருக்கு இடமில்லை!' - தம்பிதுரை கலகல

எம்.ஜி.ஆர் ஒன்றும் கலைத் துறையில் இருந்து நேரடியாக

மேலும்
img
டெங்கு ஒழிப்புக்கு மக்களின் ஒத்துழைப்பும் அவசியம்': முதல்வர்

டெங்கு விஷயத்தை சவாலாக எடுத்துக்கொண்டு

மேலும்
img
தமிழகத்தில் எத்தனை தேர்தல் வந்தாலும் அதிமுகதான் ஆட்சியமைக்கும் -ஓபிஎஸ் பேச்சு

புதுக்கோட்டை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img