செவ்வாய் 26, செப்டம்பர் 2017  
img
img

சிங்கப்பூரில் மேம்பாலம் இடிந்து விழுந்தது.
சனி 15 ஜூலை 2017 12:48:57

img

(எம்.கே.வள்ளுவன்) சிங்கப்பூர், தம்பனீஸ் விரைவு சாலைக்குச் செல்லும் வழியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலச் சாலையில் ஒரு பகுதி கட்டுமானம் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத் திலேயே ஒருவர் மாண்ட வேளையில் மேலும் 10 பேர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களின் விவரங்கள் அறிவிக்கப்படாமல் போனாலும் அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்பட் டது. நேற்று அதிகாலை 3.30 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்தது. இதனை தெரிவித்த குடிமை தற்காப்புப் படை சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் மோப்ப நாய்கள் துணையுடன் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்ததோடு அங்கு அச்சம்பவத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். தீவு விரைவுச் சாலைக்கும் இடையில் அந்த மேம்பாலச் சாலை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. அந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பர் சாங்கி ஈஸ்ட் சாலை, தீவு விரைவுச் சாலைக்குச் செல்லும் துணைச் சாலையில் குடிமை தற்காப்புப் படையின் கே 9 பிரிவின் மோப்ப நாய்கள் சோதனைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.அந்தப் பகுதியை தவிர்க்குமாறும் குடிமை தற்காப்புப்படை ஆலோசனை வழங்கியது. இதனிடையே அந்த மேம்பால கட்டு மானப்பணியை மேற்கொள்ளும் ஓகேபி நிறுவனத்திற்கு பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக இவ்வாரம் தான் அபராதம் விதிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. 2015 ஆம் ஆண்டு ஊழியர் ஒருவர் மரணமடைய காரணமாக இருந்ததற்காக அந்த அபராதம் விதிக்கப்பட்டது. 94.6 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளிக்கும் மேல் அந்த மேம்பாலம் 2015 ஆம் ஆண்டு நவம்பரில் கட்டுமானப்பணி தொடங்கப்பட்ட வேளையில் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணிகள் நிறைவு பெற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் சீன, வங்காள தேசிகள் எனவும் கூறப்பட்டது. இதனிடையே இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் கட்டுமானப் பணியை நிறுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பிரதமர் எளிதில் இந்திய வாக்காளர்களை கவர்ந்து விடுவாரா?

ஆளும் தேசிய முன்னணி, எதிர்க்கட்சி கூட்டணி என்று இரு திசைகளில் 

மேலும்
img
 கெட்கோ நில விவகாரம்: இருவர் கைது

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) அதிரடி!

மேலும்
img
தடம் மாறிய மானியங்கள், தவிக்கும் மக்கள்

சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காக ஒதுக்கீடு

மேலும்
img
குத்துச் சண்டையின்போது முகத்தில் தொடர் தாக்குதல்

உடல் கட்டழகர் பிரதீப் சுப்பிரமணியம் மரணம் 

மேலும்
img
ரா. சிவராசாவின் அரசியல் செயலாளர் மற்றும் இதர 2 உதவியாளர்கள் கைது 

குடிநுழைவுத்துறை தொடர்பான விஷயங்களைத் தீர்ப்பதற்கு 55 ஆயிரம் வெள்ளி

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img