வியாழன் 18, ஜனவரி 2018  
img
img

200 மீட்டர் ஓட்டத்தில் என் சாதனையை முறியடிக்க முடியுமா?
வெள்ளி 14 ஜூலை 2017 17:43:44

img

கோலாலம்பூர், 200 மீட்டர் ஓட்டப் போட்டியின் என் சாதனை நேரப் பதிவை முறியடிக்க முடி யுமா என்று பறக்கும் டாக்டர் டான்ஸ்ரீ எம். ஜெகதீசன் சீ போட்டியாளர்க ளுக்கு சவால் விடுத்துள்ளார்.தென்கிழக்காசிய நாடுகளுக்கான சீ விளையாட்டுப் போட்டி ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை கோலாலம் பூரில் நடைபெறவுள்ளது. 405 விளையாட்டுகளை அடிப் படையாகக் கொண்டு இப்போட்டி நடத்தப்படவுள்ளது. 38 நாடுகளில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் சீ விளையாட்டுப் போட்டியில் களமிறங்கவுள்ளனர்.இவ்வேளையில் சீ விளையாட்டுப் போட்டி குறித்து நாட்டின் முன்னாள் ஓட்டக்காரர் டான்ஸ்ரீ ஜெக தீசன் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். 1968ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட நான் அப்போட்டியை 20.92 வினாடிகளில் முடித்து புதிய நேர சாதனையை பதிவு செய்தேன்.200 மீட்டர் ஓட்டப் போட்டியில் என்னுடையே நேரப் பதிவு சாதனை தான் இன்னமும் தேசிய சாதனையாக உள்ளது. சுமார் 49 ஆண்டுகளாக இச் சாதனைக்கு உரியவன் என்ற பெருமை யுடன் நான் வாழ்ந்து வருகிறேன். என்னுடைய இச்சாதனையை மலேசியாவின் இளம் ஓட்டக்காரர்கள் முறியடிக்க வேண்டும் என்பது என்னுடையாக மிகப் பெரிய விருப்பமாக உள்ளது. அவ்வகையில் அடுத்த மாதம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் சீ விளையாட்டுப் போட்டி தான் என்னு டைய சாதனையை முறியடிப் பதற்கான சிறந்த களமாக இருக்கும் என நான் எதிர்பார்க்கிறேன். ஆகவே சீ விளையாட்டுப் போட்டி யில் களமிறங்கும் மலேசிய போட் டியாளர்கள் என் சாத னையை முறியடிக்க முடியுமா என்ற சவாலை நேரடியாகவே இங்கு முன்வைக்கிறேன் என்று அவர் கூறினார். தேசிய பயிற்றுநர் முகமட் போட் முகமட் காசிம் தலைமையில் பயிற்சி பெற்று வரும் தேசிய ஓட்டக்காரர்கள் சீ போட்டியில் வெற்றிகளை குவிப் பதுடன் பல சாதனைகளை படைக்கும் ஆற்றலையும் கொண்டிருக்கின்றனர்.அதே வேளையில் ஓட்டப் பந்தயத்தில் வெளிநாட்டினரின் ஆக்கிரமிப்பை முறியடிக்கும் வல்லமையும் அவ்வீரர்களுக்கு உண்டு. மலேசிய ஓட்டக்காரர் களின் வளர்ச்சியை நான் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். அவ்வகையில் ஓட்டப்பந்தயத்தில் நாட்டின் பெயரை மேலோங்க வைக்கும் சக்தி தேசிய வீரர்களுக்கு உண்டு என டான்ஸ்ரீ ஜெகதீசன் கூறினார்.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
உபர் கிண்ண பூப்பந்துப் போட்டிக்கான தேசிய அணியில் இடம் பிடித்த கிஷோனா 

6ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை அலோர்ஸ்டாரில்

மேலும்
img
கட்டொழுங்கில்லாத ஆட்டக்காரர்களை நீக்க தயங்கக் கூடாது

இப்படிப்பட்ட ஆட்டக்காரர்களை நீக்குவதால்

மேலும்
img
சாதனை புரிந்து நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்

கைரூல் ஹபிசின் சாதனைகளை முறியடிக்கும் இலக்குடன்

மேலும்
img
கராத்தே விளையாட்டுப் போட்டி, ஆர். கங்கா தரன், எஸ். சிவபூரணி ஆகியோர் தங்கப்பதக்கம்

ஷீகோகாய் கராத்தே சங்கத்தின் ஏற்பாட்டிலான

மேலும்
img
சோங் வெய் அபார வெற்றி

14, 21-19 என்ற புள்ளிகளில் சோங் வெய்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img