ஞாயிறு 24, செப்டம்பர் 2017  
img
img

அடிக்கடி பழுதடையும் கம்போங் துங்கு மின்சுடலை
திங்கள் 10 ஜூலை 2017 16:08:44

img

(ஆர்.குணா) கோலாலம்பூர், கம்போங் துங்குவில் உள்ள மின் சுடலை இயந்திரங்கள் அடிக்கடி பழுதடைவதால் தாங்கள் சிரமத்திற்கு ஆளாவதாக மக்கள் புகார் செய்துள்ளனர். பெட் டாலிங் ஜெயா உத்தாரா, பெட்டாலிங் ஜெயா செலாத்தான், கிளானா ஜெயா, சுபாங், டாமன்சாரா போன்ற பகுதிவாழ் மக்கள் பயன்படுத்தும் வசதியான இடத்தில் அந்த மின்சுடலை அமைந்துள்ளது. அதன் குறைந்த கட்டணமும் மக்களுக்கு பேருதவியாக இருக்கிறது. எனினும், அதில் அடிக்கடி இயந்திரங்கள் பழுதடைந்து விடுவதால் சிரமங்களை சந் திக்க நேரிடுகிறது என்று அப்பகுதி வாழ் மக்கள் சார்பில் புகாரை முன்வைத்துள்ளார் பி.ஜே. உத்தாரா ம.இ.கா துணைத் தலைவர் பத்மநாபன். இந்த மின் சுடலையை முறையாக பராமரிக்க வேண்டியது பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் பொறுப்பாகும். ஆனால், அது அலட்சியம் காட்டி வருவதே இவ்வளவு பிரச்சினைக்கும் காரணமாகும் என்று அவர் கருத்துரைத்தார். முன்னாள் துணை அமைச்சர் டத்தோ டி.முருகையா, பி.ஜே.உத்தாரா உதவித் தலைவர் சுப்பிரமணியம், பத்மநாபன் ஆகியோர் நேற்று கம்போங் துங்கு மின்சுடலையை பார்வையிட்டனர். அடுத்த வாரம் மாநகர மேயரை சந்தித்து, மின்சுடலையை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ரா. சிவராசாவின் அரசியல் செயலாளர் மற்றும் இதர 2 உதவியாளர்கள் கைது 

குடிநுழைவுத்துறை தொடர்பான விஷயங்களைத் தீர்ப்பதற்கு 55 ஆயிரம் வெள்ளி

மேலும்
img
அபு சயாப் பயங்கரவாதக் கும்பலுடன் தொடர்புடைய 7  ஆடவர்கள்  கைது 

இந்த சந்தேகப் பேர்வழிகளைத் தீவிரமாக கண்காணித்து

மேலும்
img
மாணவியிடம் பாலியல் பலாத்காரம் .

ஆசிரியர் கைது

மேலும்
img
இந்திய இளைஞரை கடத்தி வெ.30 லட்சம் பிணைப்பணம் கோரிய கும்பல்

12 இந்திய ஆடவர்கள் கைது

மேலும்
img
தீபாவளிச் சந்தை கடைகளை கோருவதில் மோதல்கள்

குறைந்த விலையில் வாங்கி, கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img