செவ்வாய் 17, ஜூலை 2018  
img
img

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி!
சனி 08 ஜூலை 2017 14:22:03

img

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலியாகி யுள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பூஞ்ச் பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இன்று காலை நடந்தேறிய இந்தத் திடீர் தாக்குதலால், கணவன்-மனைவி இருவரும் பலியாகினர். அந்தத் தம்பதியினரின் இரண்டு குழந்தைகளும் காயமடைந்து, தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இந்திய எல்லைப் பாதுகாப்பு வீரர்களுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துவருகிறது. இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்தத் தாக்குதலில், இந்திய வீரர்கள் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிகாரபூர்வமான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. முன்னதாக, நேற்று காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரர்கள் மீதும் அவர்கள் வாகனங்கள் மீதும் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், மூன்று வீரர்கள் காயமடைந்துள்ளனர். இதனால், தற்போது எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நாடுமுழுவதுமுள்ள குழந்தைகள் காப்பகங்களில் சோதனை!! மேனகா காந்தி உத்தரவு

கடந்த சில மாதங்களாகவே நாட்டில் நடந்துவரும்

மேலும்
img
மூட்டை மூட்டையாக பணம்! பெட்டி பெட்டியாக தங்கம்! - அதிர வைக்கும் எஸ்.பி.கே. நிறுவனத்தின் ஐடி ரெய்டு

மூட்டையாக பணமும் பெட்டி பெட்டியாக தங்கமும்,

மேலும்
img
மயக்க ஊசி செலுத்தி 12 வயது சிறுமியை சீரழித்த 17 பேர்! சென்னையில் அதிர்ச்சி!

வசிக்கும் 8 லிப்ட் ஆபரேட்டர்கள் மற்றும் 6 காவலாளிகள்

மேலும்
img
பாஜகவினருக்கு அதிமுகவினர் தக்க பதிலடி கொடுப்பார்கள்: ஜெயக்குமார் ஆவேசம்

வரி ஏய்ப்பு செய்தது குறித்து வருமானவரித்துறை

மேலும்
img
புழல் சிறையில் கம்பி எண்ணப் போகிறார் ஜெயக்குமார்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சாடல்!

சென்னை புழல் அருகே நேற்று நடைபெற்ற காமராஜர்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img