திங்கள் 23, ஏப்ரல் 2018  
img
img

அரசுத்துறைகளில் சரியாக பணியாற்றாதவர்களுக்கு கட்டாய ஓய்வு: யோகி ஆதித்யநாத் அதிரடி
வெள்ளி 07 ஜூலை 2017 18:19:04

img

லக்னோ, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வென்று, முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் பதவி வகித்து வருகிறார். யோகி ஆதித்யநாத் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அரசு ஊழியர்கள் சிறப் பாக செயல்படவில்லை என்றால், அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநில தலைமை செயலாளர் ராஜீவ் குமார் வெளியிட்ட அறிக்கையில், 'அரசு துறைகளில் பணியாற்றும் 50 வயதிற்கு மேல் உள்ள ஊழி யர்களுக்கு 3 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டு அவர்களின் பணி ஆய்வு செய்யப்படும். அப்போது சிறப்பாக செயல்படாத அரசு ஊழியர்கள் வலுக்கட்டாய மாக வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். இதுதொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அந்தந்த துறை ஊழியர்களை கண்காணித்து சிறப்பாக செயல்படாதவர்கள் குறித்த பட்டியலை அரசுக்கு அனுப்ப வேண்டும். மேலும் அரசு ஊழியர்களை நீக்குவதால், அடுத்த தலைமுறையினருக்கு வாய்ப்பு கிடைக்கும். மத்திய அரசும் சமீபத்தில் இந்தக் கருத்தை வலியுறுத்தி உள்ளது' என குறிப்பிட்டுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய விவகாரம் : எஸ்.வி சேகர் மீது கரூர் நீதிமன்றத்தில் வழக்கு

பெண் பத்திரிகையாளர் ஒருவரை பத்திரிகையாளர்

மேலும்
img
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு என்றால் வளர்ந்த பெண்களை சீரழிப்பது...?

ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவரை

மேலும்
img
காவிரி விவகாரம்: ஏப்ரல் 29ம் தேதி தடையை மீறி மெரினாவில் போராட்டம்

வேல்முருகன் அறிவிப்பு

மேலும்
img
வைரலாகும் எடப்பாடி தியேட்டர் விளம்பரம்

ஐயா பெயருக்கு தான்"

மேலும்
img
குஷ்புக்கு எதுக்கு கோயில்?... ஆந்திர முதல்வரின் சேவைக்காக கோயில் கட்டும் திருநங்கைகள்

வாழ்க்கை மேம்பட திருநங்கைகளுக்கான ஓய்வூதிய திட்டம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img