செவ்வாய் 21, ஆகஸ்ட் 2018  
img
img

தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன்
வெள்ளி 07 ஜூலை 2017 13:48:45

img

(துர்க்கா) ஜெம்பூல், பணம் கேட்டு கொடுக்காத தந்தையை பாராங் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து தலைமறைவான மகன் கைதாகி காவலில் 7 தினங்களுக்கு தடுத்து வைக்க நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்பட்டது. நேற்று முன்தினம் காலை 9.00 மணியளவில் பகாவ் மாஜிஸ் திரேட் நீதிமன்றத்தில் தந்தையை கொலை செய்த (48 வயது) மகன் காவலில் தடுத்து வைக்க நீதிபதி முகமட் ரேட்ஜா அஜார் ரெஜாலி உத்தரவிட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் பெல்டா லூய் தீமோர் நிலக்குடி யேற்றவாசி எஸ்.வேலாயுதம் (73 வயது), என்பவர் வீட்டில் இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பாகவே மரண மடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. பணம் கொடுக்காத காரணத்தினால் தந்தையை இரக்கமின்றி பாராங் கத்தியால் வெட்டிக் கொலை செய்ததாக குற்றவியல் 302இன் கீழ் கைது செய்யப் பட்டு காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மகன் தீவிர புலன் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார் என்று கூறப்பட்டது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மத மாற்றத்தால் பாதிக்கப்பட்ட குடும்பம்.

ஆவணமின்றி பரிதவிக்கும் ஜெயாவும் 7 பிள்ளைகளும்

மேலும்
img
மலேசியாவை ஒட்டுமொத்த சீனாவிடம் விற்கும் முயற்சி. மகாதீர் அம்பலம்.

முந்தைய அரசாங்கம் வழி வகுத்திருந்தது

மேலும்
img
ஆட்சியைப் பிடிப்போம் என்று நினைக்கவில்லை. வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டோம்.

அவற்றை நிறைவேற்றுவதில் சிரமத்தை

மேலும்
img
7 கார்களை மோதிய பஸ் டிரைவர் ஒரு போதைப் பித்தர்.

அந்த 32 வயது சந்தேகப் பேர்வழி

மேலும்
img
ஏ.இ.எஸ். சாலை  சம்மன்கள் ரத்து. அமைச்சரவை முடிவு.

அமைச்சரவைத் தீர்மானத்தை தொடர்ந்து

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img