ஞாயிறு 19, நவம்பர் 2017  
img
img

அந்நிய தலையீடு பற்றி ஹாடி பேசுவதா?
வெள்ளி 07 ஜூலை 2017 13:05:57

img

கோலாலம்பூர் பேச்சுக்குப் பேச்சு அந்நிய தலையீடு என்று வாதிடும் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிடம் ஜ.செ.க. பெருந்தலைவர் லிம் கிட் சியாங் ஒரு கேள்வியை கேட்டுள்ளார். 1எம்டிபியில் சுருட்டப்பட்ட பணத்தில் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய அமெரிக்க நீதித் துறை வழக்கு தொடுத்ததை மலேசிய விவகாரங்களில் அந்நியர் தலையீடு என்று கண்டித்த பாஸ் தலைவர் ஹாடி அவாங் உள்நாட்டு விவகாரங்களில் அந்நியர் தலையீட்டை வரவேற்பது தொல்லைகளுக்குத்தான் வழிவகுக்கும் என்றும் வலியுறுத்தினார். அந்நியர் தலையீடு என்ற ஹாடியின் வாதம் விந்தையாகவும் வினோதமாகவும் இருப்பதாக லிம் கிட் சியாங் கூறினார். அமெரிக்க அரசாங்கத் திட மிருந்தோ அதன் அமைப்புகளில் ஒன்றிடமிருந்தோ பக்கத்தான் ஹராப்பான் தலைவர்கள் கணக்கில் 260 கோடி வெள்ளி வரவு வைக்கப்பட்டிருந்தால் ஹாடி இந்நேரம் பக்காத்தான் ஹராப்பானைத் தாக்குத் தாக்கென்று தாக்கியிருப்பார். தேசிய இறையாண்மைக்குக் குழிபறிக்கும் அந்நியர் தலை யீட் டுக்கு அது சான்று என்றும் கூவியிருப்பார். அதே ஹாடி, பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், அம்பேங்கில் தம் வங்கிக் கணக்கில் இருந்த 260 கோடி வெள்ளி சவூதி அரசக் குடும்பம் 13 ஆவது பொதுத்தேர்தலுக்காகக் கொடுத்த நன்கொடை என்று கூறியபோது வாயைப் பொத்திக்கொண்டு இருந்தது ஏன்? நன்கொடை அமெரிக்காவிடமிருந்து வந்தால் அது அந்நிய தலையீடு. எனவே தவறானது,அதேவேளை சவூதி அரேபியாவிடமிருந்து வந்தால் அது நம் இறையாண்மையை மேன்மையுறச் செய்யும் எனவே ஏற்றுக்கொள்ளத்தக்கது,அப்படித்தானே? ஹாடி ‘அந்நியர் தலையீடு’ என்பதை விளக்க முற்படும் போது இரட்டை நியாயம் பேசுகிறார். மேலை நாடுகளிடமிருந்து வந்தால் தவறு சவூதி அரேபியாவிலிருந்து வந்தால் அது ஏற்றுக் கொள்ளத் தக்கது அவருக்கு என்றார் கிட் சியாங்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அன்வாரை நலம் விசாரித்தார் பிரதமர் நஜீப்

தோள்பட்டையில் ஏற்பட்ட கடுமையான வலியினால்

மேலும்
img
டி.மோகன் நேற்று அதிகாரப்பூர்வமாக செனட்டர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

இந்த பதவி உறுதிமொழி நிகழ்ச்சியில் மஇகா தேசியத் தலைவர்

மேலும்
img
கூட்டரசுப் பிரதேச அமைச்சும், டிபிகேஎல்லும் மக்களைப் பந்தாடுகின்றன

இப்பகுதி மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்

மேலும்
img
வங்கி அனுமதியின்றி காரை குத்தகைக்கு விடும் உரிமையாளருக்கு அபராதம், சிறை

வங்கிக் கடனைத் தொடர்ந்து செலுத்துவதற்காக,

மேலும்
img
மண்ணின் மைந்தர்களின் படைப்புகளை திரையரங்குகளில் ஓரங்கட்டுவது ஏன்?

ஜாங்கிரி திரைப்படத்தின் தயாரிப்பாளர் நந்தினி 

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img