img
img

சென்னையிலிருந்த மலேசியாவிற்கு போதைப்பொருள் கடத்திய ஆடவர் கைது
வியாழன் 06 ஜூலை 2017 14:17:16

img

ஆறுமுகம் பெருமாள் சிப்பாங், சென்னையிலிருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த ஆடவனை சோதனையிட்ட கே.எல்.ஐ.ஏ சுங்கத்துறையினர் அவனிடமிருந்து வெ.3 லட்சத்து 60 ஆயிரத்து 500 மதிப்புடைய 5.15 கிலோ கிராம் போதைப் பொருளை மீட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து நேற்று கே.எல்.ஐ.ஏ சுங்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது விளக்கமளித்த கே.எல்.ஐ.ஏ சுங்கத் துறையின் தலைமை இயக்குனர் டத்தோ. ஹம்சா பின் சுண்டாங், நேற்று முன்தினம் ஜூலை 4ஆம் தேதியன்று காலை 7.10 மணியளவில் எம்.எ. எஸ் சிற்கு சொந்தமான எம்.எச் 0181 விமானத்தின் மூலமாக சென்னையிலிருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்த 55 வயது டைய ஆடவனின் மீது சந்தேகம் கொண்ட சுங்கத்துறையினர் அவ்வாடவனின் துணிப் பையை சோதனையிட்டதாக கூறினார். இச்சோதனையின்போது புதிய துணிகளைக்கொண்ட பையின் அடிப்பகுதியில் உள்ள பிரத்தியேக பகுதியில் மேற்கண்ட மெத்தபெத்தாமின் வகை போதைப் பொருள் மறைத்து வைத்திருந்ததாக தெரிவித்த டத்தோ ஹம்சா இப்போதைப்பொருள் உள்நாட்டில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது என விசாரணையின் மூலமாக தெரிய வந்துள்ளது என தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அல்தான் துயாவை கொலை செய்வ தற்கு உத்தர விட்ட அந்த அதிகாரபீடம் யார்

தந்தை சரிபு ஸ்டீவ் தமக்கு எழுதிய ஓர் கடிதத்தில்

மேலும்
img
நஜீப்பின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்தை அம்னோவிடம் ஒப்படைப்பதா? முடியாது. ஐஜிபி

‘முடியாது, சட்டப்படிதான் நடப்போம்’

மேலும்
img
வலுவான எதிர்க்கட்சியாக மாற மஇகா கற்றுக்கொள்ள வேண்டும்

கூட்டரசு அரசாங்கத்தின் ஒரு பகுதியாக

மேலும்
img
 15 லட்சம் வங்காளதேசத் தொழிலாளர்களை  தருவிக்கும் உடன்பாடு மறுபரிசீலனை

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மறுபரிசீலனை

மேலும்
img
வரலாற்றில் முதல்முறையாக இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கான தனிப்பிரிவு.

நெகிரியில் பொறுப்பேற்றார் அருள்குமார்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img