புதன் 22, ஆகஸ்ட் 2018  
img
img

நடிகர் தாடி பாலாஜி தலைமறைவு.... வலைபோட்டு தேடும் போலீஸ்
புதன் 05 ஜூலை 2017 16:49:53

img

சென்னை நடிகர் தாடி பாலாஜியை போலீசார் தேடி வரும் நிலையில், முன் ஜாமீன் கேட்டு நீதி மன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவருக்கு முன் ஜாமீன் கிடைக்காது என கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் இருந்தவர் பாலாஜி. இவருக்கும் இவரது மனைவிக்கும் ஏற்பட்ட குடும்ப சண்டையில், அவரது மனைவி நித்யா மாதவரம் காவல் நிலையத்தில், 'பாலாஜி என் சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகத் திட்டுகிறார், தினமும் குடித்துவிட்டு வந்து அடிக்கிறார்' என புகார் கொடுத்தார். ஆனால் அந்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனைவி புகார் கொடுத்தார். அதனை யடுத்து தாடி பாலாஜி மீது பெண்கள் வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மூன்று சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் அவரை தேடி வரும் நிலையில், தலைமறைவாகியுள்ள தாடி பாலாஜி, முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். ஆனால் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை என போலீசார் கூறுகின்றனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
இளம்பெண் உயிரை பறித்த வாட்சப் வீடியோக்கால் சாட்டிங்!!

அந்த ஆண் நண்பரிடம் கூறிவிட்டு ஷிவானி

மேலும்
img
"ஈழ வலியை இவரைப் போல யாராலும் சொல்லமுடியாது" - சீமான்

காட்சி என்னவென்றால் கருத்தம்மா

மேலும்
img
ராகுல்காந்தி ஆக்சன்... அகில இந்திய காங்கிரஸ் புதிய பொருளாளர் நியமனம்!

சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகராக

மேலும்
img
திமுக தலைமைக்கு எதிராக செப்.5ல் பேரணி! - அழகிரி ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம்!

அதன் அடிப்படையில் அழகிரி தன் ஆதரவாளர்களை

மேலும்
img
கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கும் தி.மு.க. எம்.எல்.ஏ., - எம்.பி.க்கள்..!

மக்களின் துயர் துடைப்பு பணிகளுக்கு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img