வியாழன் 18, ஜனவரி 2018  
img
img

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக்கு வந்ந்தால் டாக்சி வாடகைக் கட்டணங்கள் ரத்து
செவ்வாய் 04 ஜூலை 2017 17:02:02

img

கோலாலம்பூர், உபர், கிரேப் போன்ற வாகன சேவைகளுக்கான உரிமத்தை வழங்குவதற்கு முன்னர் டாக்சி ஓட்டுநர்களின் நலனை அரசாங்கம் கவனிக்க வேண்டும் என்று பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரம்லி கூறினார். பெட்டாலிங்ஜெயா சிவிக் செண்டரில் நேற்று நடைபெற்ற மலேசிய டாக்சி ஓட்டுநர்கள் மாநாட்டில் உரையாற்றிய அவர், டாக்சி ஓட்டுநர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு காணப்படாத வரையில், உபர், கிரேப் சேவைகளுக்கு உரிமம் வழங்குவதையும் அந்த சேவைகளை சீர் படுத்துவதையும் தாமதப்படுத்தும்படி அரசாங்கத் தைக் கேட்டுக் கொண்டார். கார் வாடகைக் கட்டணங்களை டாக்சி ஓட்டுநர்கள் தினசரி செலுத்த வேண்டும் என கோரும் நடைமுறையை ரத்து செய்வது மீது அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். அவர்களில் பலர் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையும் சுமையும் இதுவாகும் என்று அவர் கூறினார். டாக்சி ஓட்டுநர்கள் மீது வாடகைக் கட்டணங்கள் பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்து கின்றன என்றும் டாக்சி சேவைக்கும் உபர் மற்றும் கிரேப் சேவை களுக்கும் இடையே ஆரோக்கியமற்ற போட்டி நிலவு வதாகவும் அவர் குறிப்பிட்டார்.உபர் மற்றும் கிரேப் வாகனங்களுக்கு வழங்கப்படும் அதே சலுகைகள் டாக்சி ஓட்டுநர் களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று ரபிஸி மேலும் கூறினார். அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி யைப் பிடித்தால், தினசரி டாக்சி வாடகைக் கட்டணம் ரத்து செய்யப் படுவதை நான் உறுதி செய்வேன் என்று அவர் அறிவித்தார். நாங்கள் தோல்வி அடைந்தாலும் இந்த நடைமுறையை அரசாங்கம் ரத்து செய்யும் வரையில் நான் போராடுவேன் என்று அவர் கூறினார். கடந்த ஆண்டு உபர் மற்றும் கிரேப் போன்ற சேவைகளால் எழுந்த போட்டிகளுக்கு மத்தியில், கிள்ளான் பள் ளத்தாக்கைச் சேர்ந்த 35,000 பட்ஜெட் டாக்சி ஓட்டுநர்களில் சுமார் 10,000 பேர் வாடகைக் கட்டணங்களை செலுத்த முடியாத நிலையில் தங்களுடைய வாகனங்களை நிறுவனங்களிடமே திரும்ப ஒப்படைத்து விட்டனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மலாயாவிற்காக தங்கள் உயிரை கொடுத்து போராடியவர்கள் மலாய்க்காரர்கள் மட்டுமா? 

நாட்டிற்காக ஓர் இனம் மட்டுமே போராடியிருப்பதாக

மேலும்
img
பேராவில் 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 7 தமிழ்ப்பள்ளிகளின் உரிமம் காப்பாற்றப்படுமா?

மாணவர்கள் எண்ணிக்கை பத்துக்கு கீழாக இருப்பதால்

மேலும்
img
கணவரின் மரணச் சான்றிதழை வழங்காமல் இழுத்தடிப்பு

இங்குள்ள ஜாலான் ஊத்தான் மெலிந்தாங் பத்தாவது மைல்

மேலும்
img
கெடா மாநிலத்தில் உள்ள 58 தமிழ்ப் பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக்குறி.

58 தமிழ்ப் பள்ளிகளில் குறைந்த மாணவர்களின் எண்ணிக்கை

மேலும்
img
16ஆவது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட நாற்காலியால்  சிறுவன் மரணம்

தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்ட சதீஷ் சம்பவ இடத்திலேயே

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img