திங்கள் 23, அக்டோபர் 2017  
img
img

எடப்பாடியிடம் தினகரன் சரண்டர்
ஞாயிறு 02 ஜூலை 2017 15:08:25

img

சென்னை ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்று 2 ஆக உடைந்தது. அதன் பின்னர் சசிகலா அணியில் இருந்து முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தடுக்கப்பட்டார். இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தனித்து செயல்பட தொடங்கினார். தனக்கு என்று ஒரு ஆதரவு வட்டத்தையும் உருவாக்கினார். இந்த நிலை யில் ஆட்சியில் தலையிட மாட்டேன் என்று அறிவித்த டி.டி.வி. தினகரன் ஆட்சியில் தலையிட முடிவு செய்தார். இதன் முதல் குறியாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். இதனை அதிமுகவில் உள்ள மூத்த தலைவர்கள் விரும்பவில்லை. சசிகலாவும் தினகரன் போட்டியிடுவதை விரும்பவில்லை. இருந்த போதிலும் பிடி வாதமாக இடைத்தேர்தலில் நின்றார். தான் தனியாக போய் சசிகலாவிடம் கேட்டால் வேட்பாளருக்கான விண்ணப்பத்தில் கையெழுத்திட மாட்டார் என்று நினைத்து தனது மனைவியை அனுப்பி விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கினார். தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிக பணம் பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில், டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு தினகரன் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் தினகரன் மீது சசிகலா கடும் கோபமடைந்தார். கட்சியில் இருந்த திவாகரன் உள்ளிட்ட குடும்பத்தையும் தினகரன் ஒதுக்கியதால் அவர்களின் ஆதரவும் டி.டி.வி.தினகரனுக்கு கிடைக்காமல் போனது. ஜெயிலில் இருந்து வந்த பின்னர் தினகரன் சசிகலாவை பார்ப்பதற்காக பெங்களூர் சிறைக்கு சென்றார். அப்போது சசிகலா தன்னை ஏதாவது திட்டுவார் என்று நினைத்து தனது மனைவியையும் உடன் அழைத்து சென்றார். அப்போது சசிகலா தினகரனை கடுமையாக சத்தம் போட்டார். திரும்பவும் அவர் சசி கலாவை பார்க்க சென்றார். ஆனால் அவர் அனுமதிக்கவில்லை. இதனால் சிறையில் இருக்கும் இளவரசியை மட்டும் சந்தித்து விட்டு திரும்பினார். இந்த நிலையில் தனக்கு 32 எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆதரவு உள்ளதாக தினகரன் கூறி வந்தார். தற்போது அவர்களில் 2 பேர் அதாவது வெற்றிவேல், தங்கத் தமிழ் செல்வன் ஆகியோர் மட்டுமே தொடர்ந்து அவரை சந்தித்து வருகின்றனர். மற்றவர்கள் போனால் பார்த்து விட்டு மட்டும் வந்து விடுகின்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த தினகரன் என்ன செய்வது என்று தெரியாமல் கடும் அதிர்ச்சியில் இருந்து வந்தார். இந்த நிலையில் தினகரன் மீதான வழக்கை தீவிரப்படுத்த டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால், தினகரன் அமைதியாக இருந்து வந்தார். எடப்பாடியிடம் மோதல் போக்கு இல்லாமல் சரண்டர் ஆனார். ஆட்சி அதிகாரத்தை நீங்கள் வைத்து கொள்ளுங்கள். கட்சி அதிகாரத்தை நாங்கள் வைத்து கொள்கிறோம் என்ற முடிவுக்கும் வந்தார். ஆனால், இதற்கு அதிமுகவில் உள்ள மூத்த தலைவர்கள் ஒத்து கொள்ளவில்லை. அவர்கள் மூத்த தலைவர்கள் கொண்ட குழு கட்சியை நடத்தும் என்றும் கூறி விட்டனர். இதனால் தினகரன் எடப்பாடியிடம் முழுமையாக சரண் அடைந்து விட்டார். ஜனாதிபதி தேர்தலில் தனக்கு 33 எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆதரவு உள்ளது. இதனால் பாஜ தன்னிடம் சரண்டர் ஆகிவிடும் என்று தினகரன் நினைத்திருந்தார். ஆனால், எடப்பாடியிடம் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு அளிக்குமாறு பாஜ கேட்டது. தினகரனிடம் எந்த ஆதரவும் கேட்கவில்லை. இதனால் தன்னிடம் உள்ள பலம் குறைந்து விட்டதாக தினகரன் நினைத்தார். இதையடுத்து தானாகவே வந்து பாஜவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார். மேலும் தினகரனிடம் இருந்தவர்கள் எடப்பாடியிடம் வந்தனர். அவர்களும் மரியாதை நிமித்தமாக தான் அவரை சந்தித்தோம். அவரை சந்தித்ததில் வேறு எந்த காரணமும் கிடையாது என்று தெரிவித்தனர். இதனால் எடப்பாடியின் கை மேலும் ஒங்கியது. இதனால் தினகரன் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்து வந்தார். பின்னர் எடப்பாடியிடம் மீண்டும் சரண்டர் ஆனார். மீண்டும் கட்சியில் வாய்ப்பு கொடுங்கள் என்றார். அதற்கும் மூத்த தலைவர்கள் ஒத்து கொள்ள வில்லை. தம்பித்துரையை விட்டு தூதும் அனுப்பினார். அதுவும் தோல்வியில் முடிந்தது. இதனால், தினகரன் தற்போது முழுமையாக எடப்பாடியிடம் சரண் அடைந்துள்ளார். பாஜ ஜனாதிபதி வேட்பாளர் ஆதரவு கேட்பதற்காக நேற்று சென்னை வந்த போது நடைபெற்ற கூட்டத்தில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர். அவர்கள் அப்போது எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
உங்களுடன் பயணிப்பது கடினம்’ - பா.ஜ.க-விலிருந்து விலகிய மகளிரணிச் செயலாளர்

எனக்கு கடந்த சில மாதங்களாகக் கட்சியின் செயல்பாடுகளில்

மேலும்
img
மீண்டும் சென்சார் செய்யச் சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது!' - விஷால் காட்டம்

மெர்சல்' திரைப்படத்தில் சில காட்சிகளை நீக்கக் கோரி

மேலும்
img
’மெர்சல்’ விவகாரத்தில் மோடியை நேரடியாக விமர்சித்துள்ள ராகுல் காந்தி!

மெர்சல் திரைப்படத்தை எதிர்க்கும் பா.ஜ.கவினருக்கு பதிலடி

மேலும்
img
மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டிக்கு எதிரான வசனங்களை நீக்க முடிவு

தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்

மேலும்
img
படைப்பு சுதந்திரம் மீது குண்டுவீச்சு.. பாஜகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

மதச்சாயம் பூசும் நடவடிக்கையில் சில பாஜக தலைவர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img