செவ்வாய் 21, ஆகஸ்ட் 2018  
img
img

சாட்டிலைட்' சாதனையாளர் ரிஃபாத் ஷாரூக்கை நேரில் வாழ்த்திய ஸ்டாலின்!
ஞாயிறு 02 ஜூலை 2017 14:46:55

img

உலகின் மிகச்சிறிய செயற்கைக்கோளை தயாரித்த மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகின் எடை குறைந்த 'கலாம் சாட்' என்ற செயற்கைக்கோளை கண்டுபிடித்து, அசரடித்தனர் 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' அமைப்பின் மாணவர்கள். இந்த 'கலாம்சாட்' செயற்கைக்கோளை உருவாக முக்கிய காரணமாக இருந்தது, ரிஃபாத் ஷாரூக் என்ற தமிழக மாணவர். கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியைச் சேர்ந்த 18 வயது இளைஞரான ரிஃபாத், இதற்காக பெரும் பாராட்டுகளையும் பெற்றார். 'நாசா' வருடந்தோறும் நடத்தும் 'க்யூப்ஸ் இன் ஸ்பேஸ்' போட்டிக்காக, ஏழு இளைஞர்கள் சேர்ந்து இந்த சிறிய செயற்கைக்கோளை கண்டுபிடித்தனர். தமிழக அரசு சார்பில் ரிஃபாத்துக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், ரிஃபாத் ஷாரூக்கிற்கு நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், 'கலாம்சாட்' செயற்கைக்கோள் உரு வாக காரணமாக இருந்த 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' அமைப்பை சேர்ந்த மாணவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
கேரள கோரிக்கையை ஏற்கமுடியாது! வைகை அணையை திறந்து ஒபிஎஸ் பேட்டி!!

இந்த வைகை அணையில் இருந்து எப்பொழுதும்

மேலும்
img
விஜய் ரசிகர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த கேரள மக்கள்!

திண்டுக்கல் மாவட்டம், ரவுண்டுரோடு அபிராமி

மேலும்
img
பாஜக படுதோல்வி அடையும்..-அரவிந்த் கெஜ்ரிவால்

அதன் விளைவாக 2019 ஆம் ஆண்டு

மேலும்
img
மொட்டைமாடியில் 'தேங்க்ஸ்' எழுதிய கேரள பெண்கள்!!!

6லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண

மேலும்
img
ராஜிவ்காந்தி தேசத்திற்காக என்ன செய்தார்...”-பிரதமர் மோடி

என்னென்ன முயற்சிகள் எடுத்துள்ளார்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img