செவ்வாய் 17, ஜூலை 2018  
img
img

பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து பின் வாங்கவே முடியாது!'
வெள்ளி 30 ஜூன் 2017 16:12:01

img

இன்னும் ஒரு வாரத்தில் ஜி-20 நாடுகளுக்கான மாநாடு நடக்கவுள்ள நிலையில், ஜெர்மனியின் சான்செலர் எஞ்செலா மெர்கெல், 'பாரீஸ் ஒப்பந்தத் திலிருந்து பின்வாங்கவே முடியாது. அதை பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தவும் முடியாது' என்று கடுகடுத்துள்ளார். 2015-ம் ஆண்டு, 196 நாடுகளின் பிரதிநிதிகள் பாரீஸில் சந்தித்து, இரவு பகலாக பருவநிலை மாற்றம் குறித்து விவாதித்து, ஓர் ஒப்பந்தத்தை வடி வமைத்தார்கள். அந்த ஒப்பந்தத்தின் நோக்கம், ஒவ்வொரு நாடும் கரியமில வாயு வெளியேற்றத்தை (Carbon Emmission) குறிப்பிட்ட அளவு குறைப்பது. அதற்கு ஏற்றாற்போல நாடுகள் தங்கள் கொள்கைகளை வடிவமைக்க வேண்டும் என்பதுதான் திட்டம். இதற்கு ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு முதலில் ஒப்புக்கொண்டாலும் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, 'அமெரிக்க பொருளாதாரத்தை இந்த ஒப்பந்தம் சீரழித்துவிடும்' என்று கூறி, பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இதற்கு, உலக நாடுகள் பலவும் தொடர் கண்டனங்களைக் கூறிவந்தாலும், தான் எடுத்த முடிவிலிருந்து ட்ரம்ப் பின் வாங்குவதாக இல்லை. இந்நிலையில், ஜெர்மனியின் சான்செலர் மெர்கெல் அமெரிக்காவுக்கு மறைமுகமாகச் சவால்விடும் தொனியில் பேசியுள்ளார். இந்த விஷயம் குறித்து அவர்,'அமெரிக்கா, பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறப் போவதாக அறிவித்ததிலிருந்து, இதில் ஜெயித்துக் காட்ட வேண்டுமென்று மிக உறுதியோடு இருக்கிறோம். இந்த ஒப்பந்தம், பின்வாங்கக்கூடியதோ பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தக்கூடியதோ அல்ல. எந்த நாடாவது தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வ தால் புவி வெப்பமாதல் பிரச்னையைச் சமாளித்துவிடலாம் என்று நினைத்தால் அவர்கள் மிகப் பெரிய தவறை இழைக்கின்றனர்' என்று சூச கமாகக் கூறியுள் ளார். ஜி-20 மாநாட்டில் அமெரிக்காவும், இந்தியாவும் பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
300 முதலைகளை கொன்று பழி தீர்த்த மக்கள்!

முதலைகளால் இறந்த அவரின் உடலுக்கு இழப்பீடு

மேலும்
img
இடரில் சிக்கி 7 நாட்கள் காரின் ரேடியேட்டர் தண்ணீரை குடித்து உயிர்வாழ்ந்த இளம்பெண்!!

திடீரென்று கார் தடம்புரண்டு சுமார் 250 அடி பள்ளத்தில்

மேலும்
img
"ரஷ்யா நமது நட்பு நாடல்ல''; டிரம்பின் செயலுக்கு எழும் கண்டனங்கள்!!

முதலில் இவ்விரு அதிபர்களும் சந்தித்துக்கொண்டு

மேலும்
img
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரிப் இன்று மேல்முறையீடு?

மகளுக்கும் 10 ஆண்டுகாலம் சிறை என்று

மேலும்
img
ட்ரம்ப், புதின் சந்திப்பு... சிரியா விவகாரம் பற்றி பேசப்படுமா ?

இதனால் அமெரிக்காவுடன் ரஷ்யா மோதல் போக்கையே

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img