வியாழன் 22, பிப்ரவரி 2018  
img
img

முன்னேறும் அரசுப் பள்ளிகள் மாணவர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு
வெள்ளி 29 ஜூலை 2016 12:50:31

img

பிரதானமாக வேறு தொழில் ஓடும். இந்தச் சூழலை மாற்றும் வகையில் கல்வித்துறை, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு தடாலடி நடவடிக்கையை எடுத்திருக்கிறது. அதுதான் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு. கார்பரேட் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் இந்த வருகைப் பதிவேட்டுத் திட்டம் பரிட்சார்த்த அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் நல்ல விளைவை ஏற்படுத்தியதை அடுத்து, தமிழகம் முழுவதும் இத்திட்டத்தை விரிவுபடுத்த உள்ளது கல்வித்துறை. அரசுப்பணிகள் அனைத்தையும் மின் ஆளுகை மயப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் அத்திட்டம் முழு வீச்சில் நடந்து வருகிறது. அத்திட்டத்தின் ஒரு பகுதியாகக் கடந்த ஜனவரி மாதம், ஆசிரியர்களுக்கான பயோ-மெட்ரிக் வருகைப் பதிவுத் திட்டம் பள்ளிகளில் தொடங்கப்பட்டது. இதன்படி, மாவட்ட அளவில் மொத்தமுள்ள 85 பள்ளிகளில், முதற்கட்டமாக 50 பள்ளிகளில் மட்டும் பயோ மெட்ரிக் எந்திரம் பொருத்தப்பட்டது. இதற்காக சம்பந்தப்பட்ட பள்ளி கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், கம்ப்யூட்டர் இயக்குபவர்களுக்குத் தேசியத் தகவல் மைய ஊழியர்கள் பயிற்சி அளித்தனர். இது நல்ல விளைவை ஏற்படுத்தவே, மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குரும்பலூர், துங்கபுரம், பேரளி அரசு மேல்நிலைப்பள்ளி, தம்பிரான்பட்டி, முருக்கன்குடி, வரகூர், காடூர், கூடலூர், வடக்குமாதவி அரசு உயர்நிலைப்பள்ளிகளில் முதற்கட்டமாகஇத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பின்செல்

மாணவர் செய்திகள்

img
தமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ள இலக்கியா

அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்

மேலும்
img
ஏற்ற இறக்க நிலையில் மாணவர் பதிவு

சுங்கை பாப்பான், பாசாக் மற்றும் லாயாங் லாயாங்

மேலும்
img
தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு. வாழ்க்கை கல்விக்கு வித்திட்ட துன் அமினா தமிழ்ப்பள்ளி

ஏட்டுக் கல்வி மட்டுமல்லாமல் வாழ்க்கை கல்விக்கும்

மேலும்
img
தமிழ்ப் பள்ளிக்கு அனுப்பும் விவேகமான முடிவினால்தான் உயர் நிலையை எட்டிப் பிடிக்க முடிந்தது

தேஜாஸ்வினி ரவிசந்திரன்

மேலும்
img
இமயமென உயர்த்திய வாட்சன் தமிழ்ப்பள்ளி

கல்வி பயணத்தின் உச்சியை ஈட்டுவதற்குப் பெற்றோர்களும் ஆசிரியர்களும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img