வியாழன் 24, ஆகஸ்ட் 2017  
img
img

மீரா குமார் வேட்புமனு தாக்கல்செய்தார்! சோனியா காந்தி, மன்மோகன் சிங் பங்கேற்பு
புதன் 28 ஜூன் 2017 17:32:44

img

எதிர்க்கட்சிகளின் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் மீரா குமார் இன்று வேட்புமனு தாக்கல்செய்தார். குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, பா.ஜ.க. குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த்தையும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மீரா குமாரையும் வேட்பாளராக அறிவித்துள்ளன. ராம்நாத் கோவிந்த் ஏற் கெனவே வேட்புமனு தாக்கல்செய்துள்ள நிலையில், இன்று மீரா குமார் வேட்புமனு தாக்கல்செய்தார். இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி, தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மேலும்
img
காவிரி விவகாரத்தில் தனக்குள்ள பொறுப்பை மத்திய அரசு தட்டிக்கழிக்க முடியாது

- உச்ச நீதிமன்றம்

மேலும்
img
நான் நலமாக இருக்கிறேன், ஆனால்...’ - தினகரனிடம் கதறிய சசிகலா

சிறை நெருக்கடிகளைச் சமாளிக்க முடியவில்லை

மேலும்
img
ஃபெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

சம்பள பிரச்னை தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை

மேலும்
img
எடப்பாடி பழனிசாமி நாடகமாடுகிறாரோ? ஓ.பன்னீர்செல்வம் சந்தேகம்

அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த டி.டி.வி.தினகரன்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img