வெள்ளி 15, டிசம்பர் 2017  
img
img

இளவரசி டயானாவை நான்தான் கொன்றேன்! உண்மையைப் போட்டுடைத்த உளவுத்துறை அதிகாரி
வெள்ளி 23 ஜூன் 2017 18:26:59

img

லண்டன் நாட்டிற்காகவும், அரச குடும்பத்திற்காகவும் நான் தான் டயானாவைக் கொன்றேன் என்று உளவுப்பிரிவு அதிகாரி ஜான் ஹோப்கின்ஸ் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.என்னுடைய பணிக்காலத்தில் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரை கொன்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக இணையத்தில் செய்தி ஒன்று உலா வந்தது. பின்னர் அது தவறாக வைரலான செய்தி எனவும் சில இணைய தளங்கள் செய்தி வௌியிட்டன. மரணப்படுக்கையில் இருக்கும் தான் உண்மைகளை சொல்லாத வரை தன்னுடைய உயிர் பிரியாது என்று பிரிட்டிஷ் உளவு அமைப்பின் முன்னாள் ஏஜென்ட் ஜான் ஹோப்கின்ஸ் தெரிவித்துள்ளார். உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு விஷயம் சாதாரண குடும்பத்தில் பிறந்த டயானா பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். டயானா அந்த அளவிற்கு அழகுப் பதுமையாக இருந்தார். இவர்களுக்கு வில்லியம், ஹரி என இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். சார்லஸ் உடன் வாழ்ந்த போதே தான் வேறொருவரைக் காதலிப்பதாக டயானா அறிவித்ததோடு விவாகரத்து செய்யவும் முடிவு செய்ததாகவும் ராஜ குடும்பத்திற்கு ஆதாரத்துடன் தகவல் கிடைத்தது. இந்நிலையில் கடந்த 1997ம் ஆண்டு பாரீஸில் நடந்த கார் விபத்து ஒன்றில் இங்கிலாந்து இளவரசர் சார்லசின் மனைவி டயானா உயிரிழந்தார். ஆனால் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படு கொலை என சர்ச்சை எழுந்தது. 20 ஆண்டுகளுக்கு மேல் மர்மமாகவே இருக்கும் இந்த மரணம் குறித்து பிரிட்டிஷ் புலனாய்வு அமைப்பில் பணியாற்றிய ஏஜென்ட் ஜான் ஹோப்கின்ஸ் மனம் திறந்துள்ளார். மரணப் படுக்கையில் உள்ள அவர் டயானா மரணம் உள்பட 1973ம் ஆண்டு முதல் 1999 வரை இங்கிலாந்தில் நடத்தப்பட்ட 23 கொலைகள் குறித்து மனம் திறந்துள்ளார். டயானா மிகவும் அழகான பெண் என்பதோடு, இளகிய மனம் படைத்தவர். ஆனால் அவர் இளவரசர் சார்லஸை விவாகரத்து செய்ய முடிவு செய்தது அரச குடும்பத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் டயானா அரசு குடும்ப ரகசியங்கள் பலவற்றையும் தெரிந்து வைத்திருந்தார். இதனால் அவரைக் கொல்ல வேண்டும் என்று பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் இருந்து நேரடி உத்தரவு வந்தது, அதிலும் குறிப்பாக இளவரசர் பிலிப்பே இந்த உத்தரவை பிறப்பித்தார். இதனை எனது பிரிவின் தலைவர் என்னிடம் கூறி டயானாவை கொல்ல வேண்டும், ஆனால் அது விபத்து போல இருக்க வேண்டும் என உத்தரவிட்டதாக தெரிவித்தார். அந்த உத்தரவை ஏற்றே, நாட்டிற்காகவும், அரச குடும்பத்திற்காகவும் நான் தான் டயானாவைக் கொன்றேன் என்று ஜான் கூறியுள்ளார். என்னுடைய பணிக்காலத்தில் பத்திரிக்கையாளர்கள்,அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரை கொன்றுள்ளதாகவும், தான் கொன்ற ஒரே பெண் அதுவும் அரச குடும்பத்தை சேர்ந்த பெண் டயானா தான் என்றும் ஜான் ஒப்புக் கொண்டுள்ளார். டயானாவைக் கொன்றதைக் கண்டுபிடிப்பது முடியாத காரணம் என்றும் ஒரு சில ஆதாரங்கள் மட்டுமே உள்ளது. மேலும் இந்த விவகாரம் தெரிந்த அதிகாரிகள் பலர் உயிரிழந்துவிட்ட நிலையில், தான் மட்டுமே தற்போது உயிரோடு இருப்பதாகவும் கூறியுள்ளார் ஜான்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
உச்சகட்ட போர் பதற்றம் : அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் கூட்டுப்பயிற்சி

வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் பனி படர்ந்த

மேலும்
img
அனாதை சிறுமியின் மூக்கை கடித்து தின்ற நாய் தத்து எடுத்த அமெரிக்க பெண்

இந்தியாவை சேர்ந்த பல்வேறு குழந்தைகளின் புகைப்படத்தை

மேலும்
img
புதிய இளவரசியை சுற்றியிருக்கும் சர்ச்சைகள்

இளவரசர் கொடுத்த டயானாவின் டைமண்ட்

மேலும்
img
நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்து நீதிபதி முன் தற்கொலை செய்துகொண்ட ராணுவத் தளபதி

சர்வதேச நீதிமன்ற தீர்ப்பால் ஏமாற்றமடைந்த ஸ்லோபோடன்,

மேலும்
img
சந்தேக கணவன் ; ஒவ்வொரு லைக்குக்கும் ஒவ்வொரு குத்து மனைவிக்கு நடந்த கொடுமை

சித்தரவதைக்கு ஆளான அடோல்பினோவின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img