வெள்ளி 20, அக்டோபர் 2017  
img
img

மாணவர்களை நிர்வாணமாக்கி தாக்குதல்: புகாரை ஏற்க மறுத்த 3 போலீசார் சஸ்பெண்ட்
வெள்ளி 29 ஜூலை 2016 12:21:24

img

பெங்களூரு அடுத்த ஒசகோட்டை அரசு பள்ளியில் படித்து வந்த 3 மாணவர்களை, கடந்த 30ம் தேதி, அதே பகுதியை சேர்ந்த நூருதீன் என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து அடித்து உதைத்தார். நிர்வாணமாக்கி மாணவர்களை தாக்கியதில், அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற பெற்றோர் மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையில் பெற்றோர் கொடுத்த புகாரை போலீசார் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் குழந்தைகள் நலத்துறை மற்றும் பாலியல் தடுப்பு குழுவை சேர்ந்த அதிகாரிகள் போலீசார் மீது கடும் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் புகாரை ஏற்க மறுத்த போலீசாரை சஸ்பெண்ட் செய்யவேண்டுமென்று உயரதிகாரிக்கு கோரிக்கை வைத்தனர். நேற்று அவர்களின் கோரிக்கையை ஏற்ற போலீசார் பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி, ஒசகோட்டை எஸ்.ஐ தயானந்த், தலைமை காவலர் ராஜூ, ஜெயராம் ஆகியோரை ஊரக எஸ்.பி அமித் சிங் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். புகாரை ஏற்பதற்கு ஏன் மறுப்பு தெரிவித்தார்கள் என்பதற்கான உரிய விளக்கம் அளித்த பின்னரே பணியில் சேரவேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பின்செல்

மாணவர் செய்திகள்

img
ராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடம் திறப்பு

21ஆம் நூற்றாண்டு வகுப்பறை, வாழ்வியல் திறன் அறை

மேலும்
img
தமிழர் போற்றும் கலைஅடையாளமான பரத நிகழ்ச்சி சலங்கையின் சந்தம்

ள்ளான் தெப்பி சுங்கை செல்வ விநாயகர் ஆலயத்தில் ந

மேலும்
img
ஆங்கில மொழிப்போட்டியில் தமிழ்ப்பள்ளிகள் சாதனை.

தமிழ்ப் பள்ளி மாணவன் ஜெயதேவ் ராவ் த/பெ ராமராவ் முதல் நிலை

மேலும்
img
அனைத்துலக அறிவியல் புத்தாக்க தொழிநுட்ப கண்காட்சி!

சாதனை படைத்த காஜாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்

மேலும்
img
மலேசிய தொழிநுட்பக் கழகத்தின் 58ஆவது பட்டமளிப்பு விழா!

பட்டங்களை அள்ளிக் குவித்த நம் உறவுகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img