செவ்வாய் 21, ஆகஸ்ட் 2018  
img
img

குடும்பத்தினருடன் வாழும் இந்தியர்களுக்கு 'செக்' வைத்தது சவுதி!
புதன் 21 ஜூன் 2017 15:12:31

img

சவுதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு குடும்ப வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வரிவிதிப்பு கொள்கை வரும் ஜூலை 1-ம் தேதி யிலிருந்து நடைமுறைக்கு வருகிறது. சவுதி அரசின் இந்த நடவடிக்கையால் சவுதியில் குடும்பத்தினருடன் வசிக்கும் பெரும்பாலான இந்தியர்கள், தங்கள் குடும்பத்தை இந்தியாவுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனராம். சவுதியைப் பொறுத்தவரை, பிற நாட்டவரைக் காட்டிலும் இந்தியர்களின் எண் ணிக்கை அதிகம். அங்கு சுமார் 41 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். சவுதியில் வேலை பார்க்கும் வெளிநாட்டவர்கள், மாத வருமானம் 5,000 ரியால் (இந்திய மதிப்பில் 86,000 ரூபாய்) வாங்கினால் மட்டுமே குடும்பத்தி னருடன் வசிக்க அனுமதி வழங்கப்படும். இல்லையென்றால் குடும்பத்துடன் சவுதியில் குடியேற முடியாது. இந்நிலையில் சவுதி அரசின் புதிய கொள்கை முடிவின்படி, சவுதியில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் குடும்பத்தில் ஒரு நபருக்கு மாதம் 100 ரியால் வரியாக வசூலிக்கப்படும். அதுமட்டுமன்றி 2020-க்குள் ஒரு நபருக்கான மாத வரி 400 ரியாலாக உயரும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த அறி விப்பால் சவுதியில் வாழும் இந்தியர்கள் தங்கள் குடும்பத்தினரை இந்தியாவுக்கே திருப்பி அனுப்பி வருவதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரி விக்கின்றன.

பின்செல்

உலகச் செய்திகள்

img
இந்தோனேசியாவில் அடுத்த நிலநடுக்கம்.

இந்த நிலநடுக்கத்தால், கட்டடங்கள்

மேலும்
img
கேரளாவுக்கு உதவ வரும் சவுதி அரசு...

கேரளாவாழ் மக்கள் பலர் பல வருடங்களாக

மேலும்
img
அழகியுடன் சுற்றியதால் மீன்வளத்துறை அமைச்சர் பதவி அம்பேல்...

இவர்கள் ரகசியமாக சென்ற இந்த சுற்றுலா சமூக வலைதளத்தில்

மேலும்
img
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றார்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கானுக்கு

மேலும்
img
ஐ.நாவின் முன்னாள் செயலாளர் அணன் காலமானார்

2001ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img