வெள்ளி 23, பிப்ரவரி 2018  
img
img

லண்டன் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது பாக்கெட் மணியை வழங்கிய 6 வயது சிறுவன்
செவ்வாய் 20 ஜூன் 2017 17:37:10

img

லண்டன்: லண்டன் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது பாக்கெட் மணியை தானம் வழங்கிய 6 வயது சிறுவனின் செயல் நெஞ்சை உருக வைத்துள்ளது. கடந்த 14ஆம் தேதி மேற்கு லண்டனில் உள்ள க்ரீன்பெல் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. மேலும் தற்போது அந்த கட்டடத்தில் இறந்தவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த தீ விபத்து லண்டனை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது பாக்கெட் மணியை 6 வயது சிறுவன் ஒருவன் தானம் வழங்கியுள்ளான். லண்டனை சேர்ந் தவர் ஆர்தர். இவரின் மகன் தான் சிறுவன் ஆல்ஃபி லிண்ட்ஸே. தீ விபத்து தொடர்பான காட்சிகளை தொலைக்காட்சியில் கண்ட ஆல்ஃபி அவர்களுக்கு உதவ முடிவு எடுத்தார். அதன்படி தனது உண்டியலில் இருந்த 70 பவுண்டுகள் பணத்தினை தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார். தீவிபத்து ஏற்பட்ட கிரென்ஃபெல் டவர்கட்டடத்துக்கு தனது தந்தையுடன் நேரில் சென்ற ஆல்ஃபி கென்ஸிங்டன் ஆயரான கிரஹாம் டாம்லினிடம் தான்வைத்திருந்த பணத்தை வழங்கினார். சிறுவன் ஆல்ஃபியின் இந்த செயல் நெகிழ்ச்சிகரமாக இருந்ததாக ஆயர் கிரஹாம் தெரிவித்துள்ளார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ஈரான் பயணிகள்  விமானம் அலையில் மோதி 66 பேர் பலி.

உறவினர்கள் கதறல்.

மேலும்
img
ஊழல் புகார் எதிரொலி! - தென்னாப்பிரிக்க அதிபர் பதவியைத் துறந்த ஜேக்கப் ஜுமா!

பதவி விலகக்கோரி அவரது கட்சியிலிருந்தே

மேலும்
img
17 உயிர்களைப் பலிகொண்ட ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு! - அமெரிக்காவை அச்சுறுத்தும் `மனநோய்'

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரையும் கைதுசெய்தது.

மேலும்
img
71 பயணிகளுடன் ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியது

இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில்

மேலும்
img
தமிழ் சமூக மக்களுடன் இணைந்து பிரதமர் ஜஸ்டின் பொங்கல் கொண்டாடினார்

தமிழ் பாரம்பரிய ஆடையான வேட்டி அணிந்து

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img