img
img

லண்டனில்வேன் மோதி தாக்குதல்: ஒருவர் பலி, 8 பேர் காயம்
திங்கள் 19 ஜூன் 2017 15:40:45

img

லண்டன்

வடக்கு லண்டனில் நடைபாதையில் சென்றவர்கள் மீது வேன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். இங்கிலாந்து தலை நகர் லண்டனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலத்தில் நடந்து சென்றவர்கள் மீது வேன் மூலம் மோதியும் அருகேயுள்ள மார்க்கெட்டில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியும் 7 பேரை கொன்றனர். இதனால் லண்டனில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நேற்று நள்ளிரவு மீண்டும் வேன் மூலம் மோதி தாக்குதல் நடத்தியுள்ளனர். வடக்கு லண்டனின் செவன் சிஸ்டர்ஸ் ரோட்டில் மசூதி உள் ளது. புனித ரமலான் மாதம் என்பதால் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தொழுகை நடந்தது. தொழுகை முடிந்ததும் இரவு 12.20 மணியளவில் ஏராளமா னவர்கள் வெளியே வந்துகொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிவேகமாக வந்த வேன் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதனால் அலறியடித்துக் கொண்டு பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். 

இச்சம்பவத்தால் அங்கு பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் விரைந்து வந்து வேன் ஓட்டுனரை கைது செய்தனர். ஆனால் அந்த நபர் குறித்து போலீசார் எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. அவர் தீவிரவாதியா, எதற்காக தாக்குதல் நடத்தப்பட்டது என தெரிவிக் கப்படவில்லை. ஆனால் அந்த வேனை சம்பந்தப்பட்ட நபர் திட்டமிட்டு மசூதி தொழுகை முடிந்து திரும்பியவர்கள் மீது மோதி இருக்கிறார் என பிரிட்டன் முஸ்லிம் கவுன்சில் தலைவர் ஹருன்கான் தெரிவித்துள்ளார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
இளவரசி டயானாவை நான்தான் கொன்றேன்! உண்மையைப் போட்டுடைத்த உளவுத்துறை அதிகாரி

மரணப்படுக்கையில் இருக்கும் தான் உண்மைகளை

மேலும்
img
ஜெர்மனியில் திடீரென தாக்குதல்! தாய்லாந்து மன்னரை அதிரவைத்த பொம்மைத் துப்பாக்கி

நகரைச் சுற்றிப்பார்க்க தன்னுடைய மோட்டார் சைக்கிள் வாகனத்தி

மேலும்
img
டாய்லெட் பிரஷ்க்கு பதில் கணவனின் டூத் பிரஷ்ஷால் கழிவறை சுத்தம் செய்த மனைவி கொலை

மனைவின் உடலில் 126 இடங்களில் காயம்

மேலும்
img
சீனாவில் நாய்கறி திருவிழா: அலைமோதிய மக்கள்

விலங்கியல் ஆர்வலர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு

மேலும்
img
2024-ல் மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும்

ஐ.நா., கணிப்பு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img