img
img

அர்ஜூன் சம்பத்திடம் ரஜினி கூறியது இதுதான்!
திங்கள் 19 ஜூன் 2017 13:02:48

img

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் ரசிகர்களைச் சந்தித்தார். அப்போது அரசியல் குறித்து அவர் கூறிய கருத்துகளால் பரபரப்பு ஏற்பட்டது. ரஜினியின் அரசியல் கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் கலந்து வருகின்றன. இதனால், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, தமிழருவி மணியன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் ரஜினியைச் சந்தித்தனர். அவர்களிடம் அரசியலுக்கு வருவது குறித்து ரஜினி கருத் துக் கேட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், ரஜினிகாந்த்தை, போயஸ் கார்டனிலுள்ள அவரது இல்லத்தில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம் பத் சந்தித்தார். ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அர்ஜூன் சம்பத்துடன் இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் இராம.இரவிக்குமார், இளைஞரணி மாநில பொதுச் செயலாளர், D.குருமூர்த்தி உள்ளிட்டோர் ரஜினியைச் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், "ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அரசியலுக்கு வருவது குறித்து ஆலோசித்து வருவதாக ரஜினி கூறினார். அதற்கான ஏற்பாடுகளை ரஜினி செய்து வருகிறார். நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே ரஜினி யின் எண்ணம். ரஜினி சிங்கமாக, சிங்கிளாக அரசியலுக்கு வருவார். அவரது தலைமையில் கூட்டணி அமைத்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அவரை பி.ஜே.பி இயக்கவில்லை" என்று கூறினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மு.க.ஸ்டாலினைச் சந்தித்த அ.தி.மு.க ஆதரவு எம்எல்ஏ-க்கள்!

கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர்

மேலும்
img
பாஸ்போர்ட்டில் இனி இந்தி... சுஷ்மா ஸ்வராஜ் அறிவிப்பு

இன்று பாஸ்போர்ட் சட்டத்தின் 50 ஆண்டு நிறைவையொட்டி

மேலும்
img
பேரறிவாளனுக்காகக் களத்தில் இறங்கினர் அ.தி.மு.க ஆதரவு எம்எல்ஏ-க்கள்!

மேலும் பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோர்

மேலும்
img
எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார்!

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில்

மேலும்
img
வருங்கால முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து! - எஸ்.வி.சேகர்

இதை விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கான குறியீடாகவே

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img