ஞாயிறு 20, ஆகஸ்ட் 2017  
img
img

வழங்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.
ஞாயிறு 18 ஜூன் 2017 18:27:01

img

மாணவர் நவீன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அனைவருக்கு வழங்கப்படும் தண்டனை மற்ற இளைஞர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என சுபாங் ஜெயா நகராண்மைக் கழக உறுப்பினர் மோகன் சிங் தெரிவித்தார். சமீப காலமாக நாட்டில் பகடிவதை சம்பவத்தால் உயிர் பலி ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த கொடுமையான செயலில் ஈடுபடுபவர் கள் எந்தவித பயமுமின்றி செயல்பட்டு வருகின்றனர். நவீன் கொலை வழக்குடன் இந்த செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் கடுமையாக தண்டனை விதிக்கப்பட வேண்டும். இது மற்றவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகவும் அதிலும் தீயச் செயல்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு ஒரு பாடமாகவும் அமைய வேண்டும் என அவர் சொன்னார்.பள்ளி பருவத்தில் நன்னெறி பண்புகளை படித்து அதனை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். இதனை அனைவரும் கடைப்பிடித்தால் நாட் டில் குற்றச் செயல்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். கைது செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் கடுமையான தண்டனை நவீன் குடும்பத்தினருக்கு ஆறுதலாக அமையும் வண்ணம் இருக்க வேண்டுமென மோகன் சிங் கேட்டுக் கொண்டார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
வளர்மதிக்கு ஏன் குண்டர் சட்டம்?!' - சேலம் கமிஷனருக்கு திங்கள்கிழமை வரை கெடு

கடந்த ஜூலை 15ம் தேதியன்று புதுக்கோட்டையில்

மேலும்
img
மாமா மச்சான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குழந்தை பிரிஷாவின் மருத்துவ சிகிச்சைக்கு

குழந்தை பிரிஷாவின் மருத்துவ செலவிற்கு உதவும் வகையில்

மேலும்
img
சிலாங்கூர் சிஐடி துணைத் தலைவராக ஏசிபி சுப்பிரமணியம்

12 காவல் நிலையங்களைக் கொண்ட உலுசிலாங்கூர் மாவட்ட மக்களின் அமைதிக்கும்

மேலும்
img
வீடு திரும்பாத காரணத்தைக் கேட்டதால் மனைவி சித்ரவதை

இதில் காயமடைந்த மனைவி செலாயாங் மருத்துவ மனைக்குக்

மேலும்
img
கே.எல்.ஐ.ஏ சுங்கத் துறையினரின் அதிரடி நடவடிக்கை.

அழுங்கு ஓடுகள் மற்றும் யானைத் தந்தங்கள் பறிமுதல்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img