ஞாயிறு 24, செப்டம்பர் 2017  
img
img

பிற மொழிகளில் நடிப்பது வலிமிக்கது - தனுஷ்
வியாழன் 21 ஜூலை 2016 15:05:13

img

சென்னை, : ராம்பாபு புரொடக்‌ஷன் சார்பில் எம்.பி.பாபு தயாரிக்கும் படம், ‘முடிஞ்சா இவன புடி’. தமிழ், கன்னடத்தில் தயாராகியுள்ள இதில் ‘நான் ஈ’ சுதீப், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், சதீஷ், நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். ராஜரத்னம் ஒளிப்பதிவு செய்துள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா, தனுஷ் தலைமையில் நேற்று நடந்தது. விஜய் சேதுபதி வெளியிட, சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார். விழாவில் தனுஷ் பேசியதாவது:கே.எஸ்.ரவிகுமார் தயாரிப்பாளர்களின் இயக்குனர். இவர் இன்னொரு மொழியிலும் படம் இயக்குவது சந்தோஷமாக இருக்கிறது. அதேபோல சுதீப் கன்னடத்தில் பெரிய நடிகர் மற்றும் இயக்குனர். அவர் தமிழ் சினிமாவுக்கு வருவது பெருமையாக இருக்கிறது. ‘நான் ஈ’ படத்தில் அவர் நடிப்பைப் பார்த்துவிட்டு பாலுமகேந்திரா, ‘நான் இந்த ஆண்டு தேசிய விருதின் நடுவராக இருந்தால் அவருக்குத்தான் விருது கொடுப்பேன்’ என்றார். அந்த அளவிற்கு பிரமாதமாக நடித்திருந்தார். சொந்த மொழி தவிர்த்து இன்னொரு மொழியில் நடித்து பெயர் வாங்குவது அவ்வளவு எளிதல்ல. அது வலி மிக்கது. அந்த வலியை நான் இந்திப் படங்களில் அனுபவித்துள்ளேன். கடின உழைப்பு இருந்தால் மட்டுமே பிற மொழியில் வெற்றி பெற முடியும். சுதீப் அப்படியொரு வெற்றியை தமிழில் பெறுவார் என்று நம்புகிறேன். இங்கு வந்திருக்கும் சிவகார்த்திகேயனுடன் நடித்துவிட்டேன். விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆர்வத்துடன் இருக்கிறேன். இவ்வாறு தனுஷ் கூறினார்.நடிகர்கள் சுதீப், சாய்ரவி, சதீஷ், டெல்லி கணேஷ், இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பி.வாசு, சேரன், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, டி.இமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
நிபுணன் சினிமா விமர்சனம்

கொலைக்குற்றவாளியை கண்டுபிடிக்கும் விறுவிறுப்பான படம் நிபுணன்.

மேலும்
img
'திருட்டுப் பயலே 2' டீஸரை வெளியிடும் அமலா பால்!

கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிப்பில் பாபி சிம்ஹா

மேலும்
img
நடனத்தில் சிம்பு செய்த சாதனை!

இரண்டு பாகமாக வெளிவரயிருக்கும் முதல் சிம்பு படம்

மேலும்
img
ஹீரோயின்களுக்கு மரியாதையான ரோல் கொடுங்கள்

- ஜோதிகா சாட்டையடி!

மேலும்
img
எனக்கு அது வேண்டும்... தருகிறீர்களா?

வௌிப்டையாக என கேட்ட பாரதிராஜா பட ஹீரோயின்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img