வெள்ளி 20, அக்டோபர் 2017  
img
img

ஜப்பான் கடல் பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் விபத்து: 7 வீரர்கள் மாயம்
ஞாயிறு 18 ஜூன் 2017 16:55:54

img

டோக்யோ ஜப்பான் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டு சரக்கு கப்பலும் அமெரிக்க போர்க்கப்பலும் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் போர்க் கப்பலின் வலது புறத்தில் மிகப்பெரிய உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் புகுந்தது. இந்த விபத்தில் மாயமான 7 கடற்படை வீரர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது. ஜப்பான் தலைநகர் டோக்யோவுக்கு தென்மேற்கே இசு தீபகற்ப பகுதியில் ஏசிஎக்ஸ் கிறிஸ்டல் என்ற பிலிப்பைன்ஸ் நாட்டின் சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது ஜப்பானின் யோகோசுகாவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்ற யுஎஸ்எஸ் பிட்ஸ் ஜெரால்டு என்ற போர்க்கப்பலும் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த பகுதியில் பயணம் செய்தது. அப்போது எதிர்பாராதவிதமாக இரு கப்பல் களும் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் போர்க்கப்பலின் வலப்புறத்தில் மிகப்பெரிய உடைப்பு ஏற்பட்டது. இதன் வழியாக கடல் தண்ணீர் கப்பலின் ஒரு பகுதிக்குள் ஊடுருவியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஜப்பான் கடலோர காவல் படையின் 5 கப்பல்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டன. இந்த விபத்தில் காயம் அடைந்த கப்பலின் தலைமை அதிகாரி பிரைஸ் பென்சன் மற்றும் இரண்டு வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு ஜப்பானின் யோகசுகா பகுதியில் உள்ள அமெரிக்க கடற்படை தள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். போர்க்கப்பலில் இருந்த 7 வீரர்களை காணவில்லை. அவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது. அவர்களை தேடும் பணி நடக்கிறது. பிலிப்பைன்ஸ் சரக்கு கப்பலில் 20 ஊழியர்கள் இருந்தனர். அவர்கள் யாரும் இந்த விபத்தில் காயம் அடையவில்லை. சேதம் அடைந்த அமெரிக்க போர்க் கப்பல் இழுவை படகுகள் மூலம் யோகோசுகாவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் சரக்கு கப்பல் மூழ்கியது: 11 இந்தியர்களை காணவில்லை

நடுக்கடலில் மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து 15 இந்தியர்களை

மேலும்
img
பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு

தனது ஹோட்டல் அறைக்கு அழைக்கும் ஆடியோ

மேலும்
img
அமெரிக்க வரலாற்றில் மோசமானது ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்’ - ட்ரம்ப் அதிரடி

60 நாள்களுக்குள் அமெரிக்க நாடாளுமன்றம் அறிக்கை

மேலும்
img
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 2020-ம் ஆண்டில் இருந்து பெட்ரோல்- டீசல் கார்கள் இயக்க தடை

இதற்கான பணிகளை அந்த நாடுகள் தற்போது மேற்கொண்டு வருகின்றன.

மேலும்
img
மேற்கு ஆப்பிரிக்காவில் விமானம் கடலில் விழுந்து விபத்து

4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img