வியாழன் 24, ஆகஸ்ட் 2017  
img
img

மழலையர் பள்ளியில் வெடிவிபத்து... சீனாவில் பரபரப்பு! 8பேர் பலி! 66 பேர் காயம்
வெள்ளி 16 ஜூன் 2017 13:33:29

img

சீனாவில் மழலையர் பள்ளி ஒன்றில் நடந்த வெடிவிபத்தில், 7 பேர் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு சீனாவில் இன்று மாலை மழலையர் பள்ளியின் வாசல் பகுதியில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 7 பேர் பலியாகியதாகத் தெரியவந்துள்ளது. மேலும், 66 பேர் இவ்விபத்தில் காயமடைந்துள்ளனர். இதையடுத்து காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்களில் சில குழந்தைகளும் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து ஏற்பட்டவுடன் காவல் துறையினருக்கு உடனடி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை. காவல்துறையினர் தரப்பில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது' என்றார். இதனால் கிழக்கு சீனா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
டிரம்ப் மீது குற்றச்சாட்டு: மன்னிப்புக் கோரினார் ஹாரிபாட்டர் எழுத்தாளர்

டிரம்ப் தனது மகனைப் புறக்கணிக்கவில்லை.

மேலும்
img
உலக வரைபடத்தில் வடகொரியா என்ற தேசமே இருக்காது: டிரம்ப்

வடகொரியாவையே முற்றிலுமாக ஒழித்துக் கட்டி விட

மேலும்
img
கணவருடன் வீடியோ அழைப்பில் பேசும்போதே தற்கொலை செய்த மாடல் அழகி

வங்கதேசத்தின் சிட்டகாங் பகுதியை சேர்ந்தவர் ரிசிலா பின்டே வாசர்

மேலும்
img
சிக்னல் வந்தால் ஏற்காதீர்கள்.. வேற்றுகிரகவாசிகள் நம்மை அழித்து விடுவார்கள்.

எச்சரிக்கும் பிரபல விஞ்ஞானி ஹாக்கிங்

மேலும்
img
காபூலில் உள்ள ஈராக் தூதரகத்தை குறிவைத்து கார் வெடி குண்டு தாக்குதல்

உச்ச கட்ட பாதுகாப்பு இந்த பகுதியில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img