img
img

மலேசிய சிலம்பப் போட்டியில் பினாங்கு தமிழ்ப்பள்ளி மாணவர் 9 தங்கப்பதக்கம் வென்று சாதனை
புதன் 14 ஜூன் 2017 14:03:01

img

(த. மேத்தியூஸ்)

பினாங்கு,

மலேசிய பொது சிலம்பப் போட்டியில் பினாங்கு சிலம்ப போர்க்கலை குழுவினர் 9 தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளனர்.முதலாவது அனைத்துலக மலேசிய பொது சிலம்ப வெற்றியாளர் போட்டி செராஸ் பூப்பந்து அரங்கில் நடைபெற்றது.

மலேசியாவை தவிர்த்து அனைத்துலக ரீதியில் இருந்தும் போட்டியாளர்கள் திரளாக இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களின் திறனை வெளிப்படுத் தினர். பினாங்கு மாநிலத்தை பிரதிநிதித்து 15 போட்டியாளர்களுடன் நிர்வாகி நிர்மல்ராஜ், முதலாவது பயிற்றுநர் கதிர்கேசன் ஆகியோர் கலந்து கொண் டனர்.

போட்டியில் பங்கேற்ற ஜூரு தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த லோஷினி, கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த டர்வின் ராஜ், நிபோங் திபால் மெத டிஸ் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த இரா. உருமிலா, ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த புகழ் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.

கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த தனுஷ், துங்கு அப்துல் ரஹ்மான் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த மதினிஸ்வரி, ஜாவி தோட்டத் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த பிரான்சிஸ், பழனியாண்டி தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த தட்சயாணி ஆகியோர் வெள்ளிப்பதக்கத்தை வென்றனர். ஒரே வெண் கலப் பதக்கத்தை ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த கதிரவன் வென்றதாக பினாங்கு சிலம்ப போர்க்கலை சங்கத்தின் பயிற்றுநர் மாஸ்டர் கவிக் குமார் இரவிச்சந்திரன் கூறினார்.

இதனிடையே இப்போட்டியில் குறி வைத்த இலக்கின்படி மலேசிய சிலம்ப போர்க்கலை மன்றம் ஒட்டுமொத்த முதல் நிலையில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக மன்றத்தின் தலைவர் கிரேன்ட் மாஸ்டர் முரளிதரன் கூறினார்.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
கராத்தே லீக் போட்டியில் இந்திய வீரர்கள் சாதனை

இப்போட்டியில் களமிறங்கிய போட்டியாளர்கள்

மேலும்
img
பாஜம், நீலாய் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவர் களுக்கு பூப்பந்து பயிற்சி

ஒரு காலக்கட்டத்தில் டத்தோ பஞ்சு குணாளன், ஜேம்ஸ் செல்வராஜூ

மேலும்
img
தாய்லாந்து ஓட்டப்பந்தய போட்டியில் மலேசிய வீராங்கனைகள் சாதனை

அதே நேரத்தில் 4x100 மீட்டர் ஓட்டப் பந்தய போட்டியின்

மேலும்
img
மலேசிய சிலம்பப் போட்டியில் பினாங்கு தமிழ்ப்பள்ளி மாணவர் 9 தங்கப்பதக்கம் வென்று சாதனை

பினாங்கு மாநிலத்தை பிரதிநிதித்து 15 போட்டியாளர்களுடன் நிர்வாகி

மேலும்
img
மலேசிய வீரரின் நீச்சல் சாதனை

பிரதமர் நஜீப் பாராட்டு!

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img