img
img

டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் அசத்திய போபண்ணா, கேப்ரியலா ஜோடி
சனி 10 ஜூன் 2017 14:41:37

img

பாரிஸ் பிரான்ஸ் பொது டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் அசத்திய இந்தியாவின் போபண்ணா, கனடாவின் கேப்ரியலா ஜோடி கிண்ணத்தை வென்றது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரான்ஸ் பொது கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. கலப்பு இரட்டையர் பிரிவு இறுதியாட்டத்தில் இந்தியாவின் போபண்ணா, கனடாவின் கேப்ரியலா ஜோடி, கொலம்பியாவின் ராபர்ட் பரா, ஜெர்மனியின் அனா லெனா ஜோடியை எதிர் கொண்டது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய போபண்ணா ஜோடி 2-6, 6-2, 12-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் கிண்ணத்தை வென்றது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் லாட்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோ 7-6, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் சுவிட்சர்லாந்தின் டிமியாவை தோற்கடித்து இறுதியாட்டத்திற்கு முன்னேறினார்.மற்றொரு அரையிறுதியில் ருமேனியாவின் சிமோனா ஹாலப் 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் கரோலினா பலிஸ்கோவாவை தோற்கடித்தார்.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
அனைத்துலக ஹயாஷிஹா கராத்தே போட்டியில் அஸ்னவி, விக்னேஷ் சாதனை!

பெண்களுக்கான 61 கிலோ கிராம் குமித்தே பிரிவில் களமிறங்கிய

மேலும்
img
அனைத்துலக மாஸ்டர் ஓட்டப்பந்தயப் போட்டி

புலேந்திரன் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

மேலும்
img
மலேசிய வீரர் தங்க சாதனை.

மலேசியாவுக்கான முதல் தங்கப்பதக்கத்தை இரும்புக் குண்டு

மேலும்
img
மலேசிய தடகள போட்டிகள். தங்கம் வென்றார் கீர்த்தனா

9 நாடுகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

மேலும்
img
காதலி கொடுத்த முத்தம் வெற்றிவாய்ப்பை பறித்தது

ஒலிம்பிக் சாம்பியன் கில் ராபர்ட்ஸ் தடைக்கு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img