வெள்ளி 22, மார்ச் 2019  
img
img

திடீரென போர் வந்தால் அதிலிருந்து யாரும் தப்பித்து வாழ முடியாது
வியாழன் 08 ஜூன் 2017 16:16:13

img

திடீரென போர் வந்தால் அதிலிருந்து யாரும் தப்பித்து வாழ முடியாது என ரஷ்யாவின் ஜனாதிபதி புதின் கூறியுள்ளார். பிரபல அமெரிக்க திரைப்பட இயக் குனர் ஓலிவர் ஸ்டோன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை சமீபத்தில் பேட்டி எடுத்தார். இந்த பேட்டி டாக்குமெண்டரி படம் போல தொலைக்காட்சி யில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் புதின் பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், நான் ஒன்றும் பெண் கிடையாது, அதனால் எனக்கு கெட்ட நாட்கள் என்பதே கிடையாது என கூறியுள்ளார்.இதை சொல்வதன் மூலம் நான் யாரையும் அவமதிக்க முயற்சிக்கவில்லை. இதெல்லாம் இயற்கையின் விஷயங்கள் தான் என புதின் தெரிவித்துள்ளார். திடீரென போர் வந்தால் அமெரிக்கா அதில் ஆதிக்கம் செலுத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்த புதின், அப்படியான போர் வந்தால் யாருமே அதிலிருந்து தப்பித்து வாழ முடியாது என தாம் நினைப்பதாக கூறியுள்ளார்.டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்றது குறித்த கேள்விக்கு, மாற்றம் ஒன்றே மாறாதது என கூறிய புதின், பிறப்பு முதல் இறப்பு வரை மாற்றம் என்பது இருக்கும் என கூறியுள்ளார். அமெரிக்காவின் தகவல்களை திருடி ரஷ்யாவுக்கு கொடுத்ததாக சர்ச்சையில் சிக்கி தற்போது ரஷ்யாவில் வாழும் எட்வரடு ஸ்னோடன் குறித்து புதின் கூறுகையில், ஸ்னோடன் துரோகி கிடையாது. அவர் தனது நாட்டின் நலன்களை காட்டி கொடுக்கவில்லை மற்றும் எந்த நாட்டிற்கும் தகவல்களை பரிமாறவில்லை என புதின் கூறியுள்ளார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
அமெரிக்காவில் திடீர் வெள்ளம் 

மத்திய மேற்கு மாகாணங்களான நெப்ராஸ்கா, ஐயோவா,

மேலும்
img
தேர்தல் தகராற்றில் 6 பேர் சுட்டுக் கொலை

நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சில மலையோரப்பகுதி

மேலும்
img
மசூதிகளில் மக்களைக் கொன்ற பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன் -நியூசிலாந்து பிரதமர் 

சட்டம் முழு வீச்சில் அவன் மீது பாயும்

மேலும்
img
அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச படங்களை நீக்க பேஸ்புக் அதிரடி நடவடிக்கை 

அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு

மேலும்
img
டிரம்ப்பின் வீட்டோ அதிகாரத்தை பறிக்க  வாக்கெடுப்பு 

அதிபருக்குள்ள தனி அதிகாரத்தை வைத்து நாட்டின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img