திங்கள் 25, மார்ச் 2019  
img
img

கற்பழித்த மாணவனை காத்திருந்து திருமணம் செய்து கொண்ட ஆசிரியர்
ஞாயிறு 04 ஜூன் 2017 16:07:21

img

அமெரிக்காவில் 12 வயது மாணவனை, அவரது ஆசிரியை பாலியல் பலாத்காரம் செய்து, அதன் பின் அவரையே திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்தவர் வில்லி புலாலு. இவருக்கு 12-வயது இருக்கும் போது, அவருக்கு ஆசிரியையாக மேரி கே(33) வந்துள்ளார். மேரிக்கு, வில்லி மேல் காதல் வந்துள்ளது. ஒருகட்டத்தில், மாணவன் என்றும் பார்க்காமல், வில்லியை, மேரி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆசி ரியை மாணவனை கற்பழித்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. மாணவனை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, மேரிக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது, மேரிக்கு 33 வயது. வில்லிக்கு, 12 வயது. அதன்பின் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்ததும், மேரியின் 43 வயதில், வில்லி, மேஜர் ஆனதும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இருவருக்கும் தற்போது மணவாழ்க்கை கசந்துவிட்டது. காரணம், மேரிக்கு தற்போது 55- வயதாகிறது. ஆனால், வில்லிக்கு 33 வயது மட்டுமே. இதனால் வில்லி புதிய ஜோடியை தேடி பயணிக்க தொடங்கிவிட்டாராம்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
சூரிய மண்டலத்துக்கு வெளியே  4,000 கோள்கள் கண்டுபிடிப்பு 

நாம் இருக்கும் சூரிய மண்டலத்துக்கு வெளியே

மேலும்
img
 தக்சின் மகளுக்கு ஹாங்காங்கில் திருமணம்

தக்சின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள

மேலும்
img
இடாய் புயலில் பலியானவர்கள் 417 பேர்

சுமார் 10 லட்சம் மக்கள் வாழ்வாதாரங்களை

மேலும்
img
நியூசிலாந்து தாக்குதலில் உயிர்தப்பிய  வங்கதேச கிரிக்கெட் வீரர் திருமணம்

வீரர்கள் யாரும் ஓட்டலை விட்டு வெளியே வரவேண்டாம்

மேலும்
img
பெண்களை ஆபாசமாக படம் பிடித்து இணைய  தளத்தில் விற்பனை: தென்கொரியாவில் 4 பேர் கைது 

தென்கொரியாவில் 1,600 பெண்களை ஆபாசமாக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img