வெள்ளி 17, ஆகஸ்ட் 2018  
img
img

பெண்ணாக என்னை நானே ரசிச்சேன்!ரெமோ சிவகார்த்தி
வெள்ளி 15 ஜூலை 2016 13:10:31

img

‘‘ரெமோ.... எனக்கு இன்னும் முக்கியமான படம். காதல் + காமெடியில் முழுக்க படம் பண்ணினதும் கிடையாது. இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் சொன்னபோது பிடித்தே இருந்தது. ஆனால், இந்தக் கதையை செய்யலாமா என்று 10 மாதம் யோசிச்சேன். இதில் பெண் வேஷம்... செய்ய முடியுமானு தயக்கம். கொஞ்சம் பிசகினாலும் தப்பாயிடும். ‘பொண்ணு மாதிரியே இல்லையே’ன்னு யாராவது சொல்லிட்டா கிறுகிறுத்துப் போயிடும். அப்புறம் முடிவெடுத்துட்டேன். பத்து தடவைக்கு மேலே பெண் வேஷத்திற்கு போட்டோ ஷூட் எடுத்துப் பார்த்தோம். ஒன்பது ஷூட் வரைக்கும் நம்பிக்கை வரலை. 10வது தடவை செய்யும்போது ‘டக்’னு மனசுல ஃப்ளாஷ் அடிச்சது. ஓகே சொல்லிட்டேன். நானே இந்தப் படத்தை தயாரிக்கலாம்னு முடிவு செய்தேன். அப்புறம் பார்த்தால் என் மரியாதைக்குரிய நண்பர் ஆர்.டி.ராஜா வந்தார். எங்க அலைவரிசை ஒண்ணாயிருக்கும். சமயங்களில் நான் நெனைக்கிறதை அவர் வாய்விட்டு சொல்லியே பார்த்திருக்கேன். என்னோட நல்லது ெகட்டதுகளில் தொடர்ந்து வர்றார். அவர் தயாரிக்கிறது இன்னும் சந்தோஷம். அவர் தலைமையில் வந்த பிறகு பி.சி.ஸ்ரீராம் வந்துட்டார். அப்புறம் பெரிய அளவிற்கு ஆகிடுச்சு. சந்தோஷமான படமா ‘ரெமோ’ இருக்கும்!’’

பின்செல்

img
பெண்ணாக என்னை நானே ரசிச்சேன்!ரெமோ சிவகார்த்தி

ஸ்டடி ஹாலிடேஸில் இருக்கிற காலேஜ் பையன் போல இருக்கிறார் சிவகார்த்தி.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img