ஞாயிறு 18, நவம்பர் 2018  
img
img

இரண்டாம் முறை ஈரான் அதிபரானார் ஹஸன் ரவுஹானி!
சனி 20 மே 2017 18:51:02

img

ஈரானில் நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான முடிவு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இத்தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாம் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறார் ஹஸன் ரவுஹானி. ஈரான் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபரே மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மிதவாதியான ரவுஹானிக்கு முதலில் இருந்தே தொடர் ஆதரவு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இவரை எதிர்த்து ஈரானின் பழைமைவாதக் கட்சியைச் சேர்ந்த இப்ராஹிம் ரைசி போட்டியிட்டு தோல்வியுற் றார். தீவிரக் கொள்கைவாதிகள் முக்கியப் பதவிகளுக்கு வருவது சரியல்ல என்ற ரவுஹாணியின் பிரசார உரை மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதாகக் கூறப்படுகிறது. நேற்று (வெள்ளிக்கிழமை) காலையில் தொடங்கிய தேர்தல் வாக்குப்பதிவின் இறுதியில் 70% வாக்குகள் பதிவாகியிருந்தன. இது அந்நாட்டு மக்கள் தொகை கணக்கின்படி நான்கு கோடி பேர் வாக்களித்துள்ளனர். இன்று காலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மதியம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. பல்வேறு குழப்பங்களுக்கு நடுவே நடந்து முடிந்த இத்தேர்தலில் தற்போதைய ஈரான் அதிபர் ஹஸன் ரவுஹானி 58.6% வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார். எதிர்க்கட்சி வேட்பாளர் வெறும் 39.8% வாக்குகளுடன் தோல்வியைச் சந்தித்தார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
மேலாடை இல்லாமல் ட்ரம்ப் கார் முன்னே போராட்டம் செய்த பெண்கள்.

இந்த விழாவில் மெரிக்க அதிபர் டிரம்ப்

மேலும்
img
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு..... அமெரிக்கா வருத்தம்.

இந்த நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி

மேலும்
img
குவைத்தில் வரலாறு காணாத வெள்ளம்....அடித்துச் செல்லப்படும் கார்கள்

பொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல்

மேலும்
img
ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு 

அதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ

மேலும்
img
கேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல் 

இந்நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img