புதன் 27, மார்ச் 2019  
img
img

கின்னஸ் சாதனை படைத்த உலகில் மிக வயதான பாட்டி மரணம்!
ஞாயிறு 16 ஏப்ரல் 2017 14:40:02

img

இத்தாலி நாட்டைச் சேர்ந்த மிக வயதான பாட்டியான எம்மா மோரானோ மரணமடைந்துள்ளார். கடந்த 1899-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29இல் வடக்கு இத்தாலியின் வெர்பானியாவில் பிறந்தவர் இவர். மோரானோ இருமுறை திருமணம் புரிந்துள்ளார். இரண்டாவது திருமணத்தில் பிறந்த மகன் இறந்த பிறகு தனது கொடுமைக்காரக் கணவனை அவர் பிரிந்தார். அதன் பின்னர் முழு நேர வேலை பார்த்து வந்த மோரானோ தமது முதுமையை பெரும்பாலும் படுக்கையிலேயே கழித்துள்ளார். கடந்த ஆண்டு தனது 117 ஆவது பிறந்தநாளை கொண்டாடடிய அவர், தன்னுடைய ஆயுள்குறித்து கூறுகையில், ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகளும், சில பிஸ்கட்டுகளுமே காரணம் என்றார். உலகின் மிக வயதான நபர் எனும் கின்னஸ் சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த தலைவர் ஒருவர் கூறுகையில், அவர் தனித்துவம்மிக்க வாழ்க்கையைக் கொண்டிருந்தார். வாழ்வில் துன்பத்திற் கிடையேயும் முன்னேறிச் செல்வதற்குரிய வலிமையை அவரிடமிருந்து அறிந்து கொள்ளலாம் என்றார். மேலும் இதுவரை உலகில் அதிக வயதுடைய வராக வாழ்ந்து வந்தவர் பிரெஞ்சு நாட்டின் ஜீன்னே கால்மெண்ட் எனும் மூதாட்டியே என்று கூறப்படுகிறது. அவர் 122 வருடம் வாழ்ந்து 1997 ஆம் ஆண் டில் மறைந்தார் என கூறப்படுகிறது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
கிராமத்துக்குள் புகுந்து 134 பேரை துடிதுடிக்க கொடூரமாக கொன்ற வேட்டைக்காரர்கள்

தோகோன் பழங்குடியினருக்கும், புலானி விவசாயிகளுக்கும்

மேலும்
img
சூரிய மண்டலத்துக்கு வெளியே  4,000 கோள்கள் கண்டுபிடிப்பு 

நாம் இருக்கும் சூரிய மண்டலத்துக்கு வெளியே

மேலும்
img
 தக்சின் மகளுக்கு ஹாங்காங்கில் திருமணம்

தக்சின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள

மேலும்
img
இடாய் புயலில் பலியானவர்கள் 417 பேர்

சுமார் 10 லட்சம் மக்கள் வாழ்வாதாரங்களை

மேலும்
img
நியூசிலாந்து தாக்குதலில் உயிர்தப்பிய  வங்கதேச கிரிக்கெட் வீரர் திருமணம்

வீரர்கள் யாரும் ஓட்டலை விட்டு வெளியே வரவேண்டாம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img