ஞாயிறு 20, ஜனவரி 2019  
img
img

ரஷ்யா-அமெரிக்கா இடையே மோதல் வெடிக்கும் அபாயம்
புதன் 12 ஏப்ரல் 2017 09:05:48

img

அமெரிக்காவை நேரடியாக எதிர்க்கும் முடிவுக்கு நான் தயார் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிரிய பகுதியில் இரு நாடுகளும் மோதலில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதையடுத்து அமெரிக்காவுக்கும், தங்களுக்குமுள்ள ராணுவ தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. சிரியா தொடர்பாக 2015ல் இருந்து ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்குமிடையே Deconfliction channels என்ற ஒரு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி வடகிழக்கு சிரியா பகுதியில், அமெரிக்க மற்றும் ரஷ்ய விமான ஓட்டிகள் தங்கள் விமானங்களுக்கு இடையே கணிசமான இடைவெளி இருப் பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.ஒருவருக்கொருவர் தாக்கக் கூடாது என்பதாகும். இதற்காக 'ஹாட்லைன்' வசதி2 நாடுகளுக்கிடையே உரு வானது. இந்த வசதியை இப்போது ரஷ்ய ஜனாதிபதி துண்டித்திருக்கிறார். இதனால் ரஷ்ய, அமெரிக்க விமானங்கள் சிரிய வான்வெளியில் மோதலில் ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும், அமெரிக்காவை நேரடியாக எதிர்க்கும் முடிவுக்கு நான் தயார் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
வைரம் பதிக்கப்பட்ட  மாடல் அழகியின் உதட்டுக்கு கின்னஸ் சாதனை

இந்த நிறுவனம் வைர நகைகளை

மேலும்
img
அவசர நிலை பிரகடனம் செய்வேன்-அதிபர் டிரம்ப் மிரட்டல் 

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள்

மேலும்
img
சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம் 

இந்த செயற்கைகோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு

மேலும்
img
குரங்குக்கு பாலியல் தொல்லை இளம்பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை 

பஸ்மாவிற்குத் தெரியாமல் செல்போனில் வீடியோவாக

மேலும்
img
மொத்த மனித இனத்தையும் சிலந்திகள் தின்று தீர்க்கும் 

சிலந்திகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img