ஞாயிறு 25, மார்ச் 2018  
img
img

பூப்பந்து விளையாட்டில் இருந்து தற்போதைக்கு ஓய்வில்லை!
செவ்வாய் 11 ஏப்ரல் 2017 19:05:18

img

பூப்பந்து விளையாட்டில் இருந்து தற்போதைக்கு ஓய்வில்லை என்று உலக ஜாம்பவான்களான டத்தோ லீ சோங் வெய், லின் டான் ஆகியோர் நேற்று அறிவித்தனர்.மலேசிய பொது பூப்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்திற்கு பின் இவ்விரு வீரர்களும் செய்தியாளர்களிடம் பேசினர். எனக்கும் லின் டானுக்கும் 34, 33 வயதாகிய நிலையிலும் பூப்பந்து விளையாட்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறோம். இவ்விளையாட்டில் இன்னும் பல சாதனைகளை படைப்பதற்காக காத்துக் கொண்டி ருக்கிறோம். நிச்சயம் அச்சாதனைகளை நாங்கள் அடைவோம். அதுவரை பூப்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதை நாங்கள் நினைக்க போவதில்லை என்று டத்தோ லீ சோங் வெய் கூறினார். மலேசிய பொது பூப்பந்துப் போட்டியில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 11 முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளேன். இதில் 2007, 2015 உட்பட இவ்வாண்டிலும் அச்சாம்பியன் பட்டத்தை என்னால் வெல்ல முடியாமல் போனது. இருந்த போதிலும் இத்தோல்வியை கண்டு நான் ஒரு போதும் துவண்டு போக மாட்டேன். அடுத்து எந்த போட்டி யில் வெற்றி பெற வேண்டும் என்பதில் என்னுடைய முழு கவனமும் இருக்கும். இதன் அடிப்படையில் லின் டானிடம் தோல்வி கண்டதை கண்டு வருத்தப்படாமல் அடுத்த மலேசிய போட்டி யில் அவரை எப்படி வீழ்த்துவது என்பதில் தான் என்னுடைய முழு கவனமும் இருக்கும் என்று டத்தோ லீ சோங் வெய் செய்தியாளர் களிடம் கூறினார். முன்னதாக கூச்சிங்கில் நடை பெற்ற மலேசிய பொது பூப்பந்துப் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் டத்தோ லீ சோங் வெய், சீனாவின் லின் டானை சந்தித்து விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லீ சோங் வெய் 19-21, 14-21 என்ற செட் கணக்கில் லின் டானி டம் தோல்வி கண்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
ஒன் சாம்பியன் போட்டியில் மலேசிய வீரர் அகிலன் தாணி வெற்றி

இந்தியாவின் அமிரேஸ் கௌபேய் களமிறங்கினார்

மேலும்
img
மலேசியாவில் அனைத்துலக தெக்குவாண்டோ அகாடமி

தெக்குவாண்டோ விளையாட்டுத்துறை மிகப்

மேலும்
img
நீச்சல்: 99 வயதில் உலக சாதனை படைத்த வீரர்

56.12 விநாடிகளில் கடந்து உலக சாதனையை

மேலும்
img
சீ போட்டிக்கு தகுதி பெற ஓட்டத்திறனை மேம்படுத்த வேண்டும்.

400 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஒரு சில காரணங்களால்

மேலும்
img
கோலக்கிள்ளானில் 2 இடங்களுக்கு கோல்கீப்பர் ஆறுமுகத்தின் பெயர்

‘டத்தோ ஆர்.ஆறுமுகம் மினி ஸ்டேடியம்’

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img