img
img

தாயகம் திரும்பும் புலம்பெயர் தமிழ் மக்களை அச்சுறுத்தல்!
புதன் 05 ஏப்ரல் 2017 15:40:31

img

தாயகம் திரும்பும் புலம்பெயர் தமிழ் மக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித் துள்ளனர். யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று இடம்பெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ண இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தாயகம் திரும்பும் புலம் பெயர் தமிழ் மக்களை அச்சுறுத்தி பெருந்தொகையான பணம் பறிக்கப்படுகின்றது. இது போன்ற சம்பவங்கள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளன. எனினும் பாதிக்கப்பட்ட தரப்பினர் எவரும் முறைப் பாடுகளை வழங்குவதற்கு தயங்கி வருகின்றனர். மேலும், இது குறித்து தாயகம் திருப்பும் புலம்பெயர் தமிழர்கள் எச்சரிக்கையுடனும், அவதானத்துடனும் இருக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். அத்து டன், பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை வழங்க துணிந்து முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரி வித்துள்ளார்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எத்தகைய விசாரணையையும் சந்திக்கத் தயார் 

பழையதை தோண்டாதீர்கள். கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள்

மேலும்
img
இந்தியா-பாகிஸ்தானை கவனிக்கும் இலங்கை 

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்ற நிலையை

மேலும்
img
தமிழர்களை நோக்கி கோத்தபாய சவால் 

தமிழ், முஸ்லிம்களின் ஆதரவு கிடைக்காததால் அல்ல.

மேலும்
img
அதிபர் வேட்பாளர் யார் மைத்திரி-மகிந்த மோதல் 

இலங்கை ஓர் இறைமையுள்ள நாடு என்பதனால்

மேலும்
img
இலங்கை போர் குற்ற விசாரணை சிறிசேனாவுக்கு எதிராக பிரதமர் ரணில் கருத்து

இலங்கை போரில் இருதரப்பிலும் நடைபெற்ற மனித

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img