ஞாயிறு 20, ஜனவரி 2019  
img
img

அறுவை சிகிச்சை செய்யாமல் ஆட்டம் போட்ட மருத்துவர்கள்
புதன் 29 மார்ச் 2017 17:19:53

img

கொலம்பியாவில் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் மருத்துவர்கள் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.கொலாம்பியாவின் போலிவார் பகுதியில் Santa Cruz de Bocagrande என்ற கிளினீக் உள்ளது. இங்கு சமீபத்தில் நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நோயாளி மயக்க நிலையில் அறுவை சிகிச்சைக்கு தயாராக இருந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய செவிலியர்கள் மற்றும் உடன் இருந்த மருத்துவர்கள் சிரித்துக் கொண்டே ஆட்டம் போட்டுள்ளனர்.இதை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதற்கு அந்த கிளினிக் சார்பில் கூறுகையில், இது போன்ற தவறான செயலில் ஈடுபட்ட ஐந்து பேரையும் நீக்கவிட்டதாகவும், ஒரு உயிரின் நிலைமை உணராமல் அவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள். இது ஒரு தவறான செயல் என்று கூறியுள்ளார். மேலும் இந்த கிளீனிக் துவங்கி ஏழு வருடங்கள் ஆகி யுள்ள நிலையில் எந்த ஒரு தவறும் இதுவரை நடந்ததில்லை. இது போன்ற தவறுகள் இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியதால், பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
வைரம் பதிக்கப்பட்ட  மாடல் அழகியின் உதட்டுக்கு கின்னஸ் சாதனை

இந்த நிறுவனம் வைர நகைகளை

மேலும்
img
அவசர நிலை பிரகடனம் செய்வேன்-அதிபர் டிரம்ப் மிரட்டல் 

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள்

மேலும்
img
சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம் 

இந்த செயற்கைகோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு

மேலும்
img
குரங்குக்கு பாலியல் தொல்லை இளம்பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை 

பஸ்மாவிற்குத் தெரியாமல் செல்போனில் வீடியோவாக

மேலும்
img
மொத்த மனித இனத்தையும் சிலந்திகள் தின்று தீர்க்கும் 

சிலந்திகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img