வியாழன் 22, மார்ச் 2018  
img
img

மலேசியாவில் தனி வரலாறு படைப்பார் தீனா !
செவ்வாய் 21 மார்ச் 2017 16:10:07

img

அனைத்துலகப் போட்டிகளில் தொடர்ந்து வெல்ல வேண்டும். அடுத்து வரும் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற வேண்டும். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது எனது கனவு என்று இளம் பூப்பந்து வீராங்கனையான தீனா முரளி தரன் நேற்று கூறினார். பூப்பந்துப் போட்டிகளில் மலேசியாவுக்கென தனி வரலாறு உண்டு. அந்த வரலாற்றுக்குள் ஒரு வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறார் தீனா.அண்மையில் ஈப்போவில் நடந்து முடிந்த தேசிய பூப்பந்து சாம்பியன் போட் டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தேசிய சாம்பியனாக வாகை சூடியுள்ளார் 19 வயதுடைய தீனா. தீனாவின் இந்த வெற்றி, மலேசிய இந்தியர்களைப் பொறுத்தவரை ஒரு வரலாற்றுப்பூர்வமான சாதனையாகும். பூப்பந்துப் போட்டியின் மகளிர் பிரிவில் தேசிய சாம்பியனாக வாகை சூடியிருக்கும் முதல் மலேசிய இந்திய வீராங்கனை என்ற சாதனையை தீனா படைத்திருக்கிறார்.தீனாவின் மூத்த சகோதரர் கஜென் சிலாங்கூர் மாநி லத்தைப் பிரதிநிதித்து விளையாடியுள்ளார். அதேவேளையில், தீனாவின் இளைய சகோதரி செலினா முரளி தரன் தற்போது சிலாங்கூரை பிரதிநிதித்து விளையாடி வருகிறார். தேசிய சாம்பியன் போட்டியில் வென்றிருந்தாலும் தாம் அனைத்துலக போட்டிகளில் முத்திரை பதிக்கவேண்டும் என்ற வேட்கையுடன் தொடர்ந்து கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார். 6 வயதில் இருந்தே பூப்பந்து விளையாடி வருகிறேன். எனது வெற்றிக்காக நீண்ட காலம் பயிற்சி செய்து வந்துள்ளேன். எனக்கு மிகவும் பக்கபலமாக இருப்பவர்கள் என் பெற்றோர்தான் என்று அவர் கூறினார். கிள்ளானைச் சேர்ந்த முரளிதரன் -டாக்டர் பரிமளா தம்பதியரின் இரண் டாவது பிள்ளையான தீனா, தனது முக்கிய இலக்கு ஒலிம் பிக் போட்டி வரை சென்று பதக்கம் வெல்வதுதான் என்கிறார்.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
ஒன் சாம்பியன் போட்டியில் மலேசிய வீரர் அகிலன் தாணி வெற்றி

இந்தியாவின் அமிரேஸ் கௌபேய் களமிறங்கினார்

மேலும்
img
மலேசியாவில் அனைத்துலக தெக்குவாண்டோ அகாடமி

தெக்குவாண்டோ விளையாட்டுத்துறை மிகப்

மேலும்
img
நீச்சல்: 99 வயதில் உலக சாதனை படைத்த வீரர்

56.12 விநாடிகளில் கடந்து உலக சாதனையை

மேலும்
img
சீ போட்டிக்கு தகுதி பெற ஓட்டத்திறனை மேம்படுத்த வேண்டும்.

400 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஒரு சில காரணங்களால்

மேலும்
img
கோலக்கிள்ளானில் 2 இடங்களுக்கு கோல்கீப்பர் ஆறுமுகத்தின் பெயர்

‘டத்தோ ஆர்.ஆறுமுகம் மினி ஸ்டேடியம்’

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img