செவ்வாய் 26, செப்டம்பர் 2017  
img
img

நான் நாட்டை விட்டு வெளியேறினால் உங்களுக்கு அவமானம் இல்லையா?
செவ்வாய் 14 மார்ச் 2017 11:20:52

img

நான் நாட்டை விட்டு வெளியேறினால் உங்களுக்கு அவமானம் இல்லையா என நடிகர் கமல்ஹாசன் ஆவேசமாகக் கேட்டுள்ளார். சண்டியர் பட தலைப் புக்கு பிரச்சினை கொடுத்ததும் அரசியல்தான் என்றும் அவர் குற்றம்சாட்டினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் தொடர்ந்து சசிகலா குடும்பத் தினரின் ஆதிக் கத்துக்கு எதிராக கருத்துத் தெரிவித்து வருகிறார். இதையடுத்த நாட்டை விட்டுப் போகிறேன் என்றவர் நாட்டு பிரச்சினை குறித்து பேசுகிறார் என அதிமுக தரப்பில் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. தனியார் செதி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த நடிகர் கமல் ஹாசன் இன்றைய அரசியல் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து பேட்டி யளித்தார். அவரது பேட்டியில், அப்போது, நாட்டு நடப்பு குறித்து பேசினால், நாட்டை விட்டு போகிறேன் என்று சொன்னவர் நாட்டின் பிரச்சினை குறித்து பேசுகிறார் என்கின்றனர். நாட்டை விட்டு நான் வெளியேறினால் அது இந்த அரசுக்கு அவமானம் இல்லையா? இங்கு இருப்பது போல் இடைஞ்சல்களும் பிரச்சினைகளும் இல்லாத ஒரு நாட்டிற்குதான் செல்வதாக நான் கூறியிருந்தேன். சண்டியர் பட தலைப்புக்கு வந்த பிரச்சினையும் அரசியல் காரணமாகத்தான். விஸ்வரூபம் படத்திற்கு வந்த பிரச்சினைகள் எல்லோருக்கும் தெரியும். அதன் பின் அரசியலைத் தவிர வேறு ஏதும் காரணமல்ல. கடந்த 2013ஆம் ஆண்டு விஸ்வரூபம் படத்தை வெளியிட தடைவிதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறுவதாக நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார். அதனை வைத்து பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
நிபுணன் சினிமா விமர்சனம்

கொலைக்குற்றவாளியை கண்டுபிடிக்கும் விறுவிறுப்பான படம் நிபுணன்.

மேலும்
img
'திருட்டுப் பயலே 2' டீஸரை வெளியிடும் அமலா பால்!

கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிப்பில் பாபி சிம்ஹா

மேலும்
img
நடனத்தில் சிம்பு செய்த சாதனை!

இரண்டு பாகமாக வெளிவரயிருக்கும் முதல் சிம்பு படம்

மேலும்
img
ஹீரோயின்களுக்கு மரியாதையான ரோல் கொடுங்கள்

- ஜோதிகா சாட்டையடி!

மேலும்
img
எனக்கு அது வேண்டும்... தருகிறீர்களா?

வௌிப்டையாக என கேட்ட பாரதிராஜா பட ஹீரோயின்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img